கூற்றுவ நாயனார் 1139. | நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல போதங் கருத்திற் பொறித்தமை யாலது கைகொடுப்ப ஓதந் தழுவிய ஞாலமெல் லாமொரு கோலின்வைத்தான் கோதை நெடுவேற் களப்பாள னாகிய கூற்றுவனே. | | 47 |
சுந்தரமூர்த்தி நாயனார் 1140. | கூற்றுக் கெவனோ புகல்திரு வாரூரன் பொன்முடிமேல் ஏற்றுத் தொடையலு மின்னடைக் காயு மிடுதருமக் கோற்றொத்து கூனனுங் கூன்போய்க் குருடனுங் கண்பெற்றமை சாற்றித் திரியும் பழமொழி யாமித் தரணியிலே. | | 48 |
அண்டர் - தேவர். கோணம், வரையறுக்கப்பட்ட இடம். கணம் - கூட்டம்; இது சிவ கணத்தையேயன்றிப் பதினெண் கணங்களையும் குறித்தது. கணத்துக்கு நாயகம் பெற்றது பின்னர் என்க. காண், முன்னிலையசை. கண்டல் - தாழம் பூ. சோறு - சோற்றி. இஃது, 'உணவு' என வேறொரு பொருளையும் நயம்படக் குறித்தது. 1139. குறிப்புரை: நாதன் திருவடியே முடியாக - வேறு முடி புனையாமல் தில்லைப் பெருமான் திருவடியே முடியாக. போதம் - ஞானம். பொறித்தல் - பதித்தல். அது - அத்திருவடி. கைகொடுத்தல் - உற்றுழி உதவுதல். ஓதம் - அலை; கடல் அலை. கோதை - மாலை. இதனை வேலுக்கும், நாயனாருக்கும் கொள்க. களப்பாளன். 1140. குறிப்புரை: புகல் - நம்பால் வருதல். எவன் - எக் காரணம் பற்றி உண்டாகும்? 'உண்டாகாது' என்பதாம். 'கூற்றுக்குப் புகல் எவன்' என மாற்றி, இறுதியில் கூட்டி யுரைக்க. ஓகாரம் அசை. திருஆரூரன் - சுந்தர மூர்த்தி நாயனார். பிற்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இரட்டையரைப் போல அக்காலத்தில், நடக்க மாட்டாத கூனன் ஒருவனைக் குருடன் ஒருவன் சுமந்து செல்லக் கூனன் பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுத்தும், வெற்றிலைப் பாக்குத் தேடிக் கொணர்ந்தும் நாள்தோறும் சுந்தரருக்குக் கொடுத்து வந்தமையால் அவர் பரவையாரது ஊடலை இறைவன் தூது சென்று தீர்த்தபின் இல்லத்தில் புக்கபொழுது அவ் இருவருடைய கூனையும், குருட்டையும் நீக்கி நல்லுடல் பெறச் செய்தமை இப்பாட்டில் குறிக்கப்பட்டது. இதனைச் சேக்கிழாரும் கூற்றுவ நாயனார் புராணத்து இறுதிப்பாட்டில் கூறியருளினார். அடைக்காய் - வெற்றிலைப்பாக்கு. கோல் - நெறி. தொத்துதல் - பற்றி நிற்றல். 'தருமக் கோலில் தொத்து கூனனும், குருடனும்' என்க. "போய்" என்னும்
|