பக்கம் எண் :

817திருத்தொண்டர் திருவந்தாதி

திருவாரூர்ப் பிறந்தார்கள்

1165.செல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ ரேயத னால்திகழச்
செல்வம் பெருகுதென் னாரூர்ப் பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க்கணித் தாய செழுநெறியே.

73


என்றார். 'ஆஞ்ஞையோடு நிற்கும் ஆதார யோகமும் பிறப்பை அறுக்காது' என்பதை "யோகில் - தருவதோர் சமாதிதானும் தாழ்ந்து பின் சனனம் சாரும்" என்னும் சித்தியார் மொழியால்1 உணர்க.

நிராதாரம் நாதத் தானமாகவும், துவாதசாந்தம் நாதாந்தமாகவும் சொல்லப்படுதல் பற்றியும், அதுவே சிவம் விளங்கும் இடமாதல் பற்றியும், சித்தத்தைத் துவாதசாந்தத்தில் செலுத்தியவரைச் சேக்கிழார், "நாதாந்தர் - தாரணையால் சிவத்த உரைத்த சித்தத்தார்" என்றார். எனவே அதனையே இவ்வாசிரியர் இங்கு வித்தகத் தானத்து ஒருவழிக் கொண்டு சிவன் திருப்பாத மலர்க்கீழ்ச் சித்தம் வைத்தார்" என்றார் என்க.

ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க; உந்தீபற
விமலற்கு இடம் அது என்று உந்தீபற

என்றே சாத்திரத்திலும்2 கூறப்பட்டது. நிராதாரம் - ஏழாம் தானம். மீதானம் - துவாதசாந்தம். சென்னி மத்தம் வைத்தான் - திருமுடியில் ஊமத்தைப் பூவைச் சூடியிருப்பவன்; சிவன், 'நிராதார, மீதான யோகங்களே ஞானயோகம்' என்பது உணர்த்துதற்கு அதனையுடையவர்களை "வீடுபேறு எய்திய செல்வர்கள்" என்றார். எனவே, பிற்காலத்துச் சாத்திரங்களில் 'சிவயோகிகள்' என குறிக்கப்படுவார் இந்த ஞான யோகிகளே என்பது உணர்க. 'சித்தம்' வைத்தாரே வீடுபேறு எய்திய செல்வர்கள் என்பர்' என முடிக்க.

1165. குறிப்புரை: 'திருவாரூரில் வந்து பிறப்பவர்கள் முன்பு சிவகணத்துள் இருந்தவர்களே' என்பதும், 'அவர்கள் முன்னை யுணர்வு முதிரப்பெற்றுச் சிவனடி சேர்தற்கே அங்கு வந்து பிறக்கின்றனர்' என்பதும் அருளாளர் மரபு, அதனால் அவர்கள் யாவரும் திருத்தொண்டராவர் என்க. 'திருவாரூர்ப் பிறந்தார் யாவரும் சிவகணத்தவரே' என்பது பெரிய புராணத்துள் நமிநந்தியடிகள் புராணத்துள்ளும் விளக்கப் பட்டது. 'சேவடியே செழுநெறி' என இயைத்து முடிக்க. செல்வ நெறி திருவருளாகிய செல்வத்தையுடைய நெறி. அணித்து - அண்மையில் உள்ளது. மதில்


1. சூ - 4 - 34. பெரியபுராணம்
2. திருவுந்தியார் - 8.