பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை850

1227.மதிக்க தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித்
துதிக்கத் தகுசண்பை நாதன் கருதி கடந்துழவோர்
மிதிக்கக் கமலம் முகிழ்த்தண் தேனுண்டு, மிண்டிவரால்
குதிக்கக் குருகிரி யுங்கொச்சை நாடு குறுகுமினே.

46

1228.குறுமனம் உள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்ன
நறுமலர் மென்குழ லாயஞ்ச லெம்மூர் நகுமதிசென்(று)
 

வாட்டிடக் (கண்டும்) காரும், மறுவும் உன்னையே அத்தனைக்குப் படுகின்றன' எனக் கூட்டி முடிக்க. சூடு நல் தார்த் தமிழ் ஆகரன் - சிவபெருமானுக்கு அணிவிக்கின்ற நல்ல மாலையாம் தமிழுக்கு இருப்பிடமானவன்; ஞானசம்பந்தர். ஏசறுதல் - ஏக்கம் உறுதல். கொம்பு - பூங்கொம்பு போல்வாள்; தலைவி 'தமிழாகரன் போல நீயும் பகையாகின்றனை' என்றமையால் உம்மை இறந்தது தழுவிய எச்சம். 'பகையாய்' என ஆக்கம் வருவிக்க. ஆடுதல் - வெல்லுதல்; "ஆடாடென்ப ஒருசாரோரே; - ஆடன் றென்ப ஒருசாரோரே"1 என்றது காண்க. அரவம் - இராகு என்னும் பாம்பு. 'வாட்டிட' என எதுகை நோக்கி இடைக் குறைந்து நின்றது. கார் - மேகம்; இது நிலவிற்குப் பெருங்குறையாய் நின்று இழிவை உண்டாக்குகின்றது. அத்தனைப் படுகின்ற - அந்த அளவு பொருந்துகின்றன.

1227. குறிப்புரை: இப்பாட்டு, களவின் கண் தோழி தலைவனை "வேளாண் பெருநெறி வேண்டியது"2 அஃதாவது தலைவனை விருந்தினனாகத் தம் இல்லத்தில் ஓர் இரவு தங்கிச் செல்ல வேண்டியது.

மதிக்கு அத்தகு நுதல் சந்திர உவமையாகின்ற அத்துணைத் தகுதி வாய்ந்த நெற்றி. 'உவமை யாகின்ற' என்பது சொல்லெச்சம். மாது - தலைவி மாதொடும் வைகுதல் களவினாலாம். "வைகி" என்றதனால் 'இராப் பொழுது' என்பதும், அதனானே, 'நாடு குறுகுதல் பொழுது புலர்ந்தபின்' என்பதும் போந்தன. கருது - இசை. "அதனைக் கடந்து" என்றது. 'நகர்க்குப் புறத்தே சென்று' என்றபடி. கமலம், தாமரை மலர்; ஆகுபெயர், முகிழ்ந்த தேன் - கட்டு அவிழாமையால் தங்கியுள்ள தேன். அதனை உண்பது வரால் மீன். மிண்டி - உழவர்களையும் மோதி. குருகு - நீர்ப் பறவை. இரியும் - அஞ்சி ஓடுகின்ற, "துதிக்கத் தகு..... குருகு இரியும்" - என்றது கொச்சையை (சீகாழியை)ச் சிறப்பித்தது.

1228. குறிப்புரை: இப்பாட்டு, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்த் தலைவன் பிரியக் கருதிய பொழுது தலைவி, 'இவர்


1. புறம் - 85.
2. தொல் - பொருள் - களவியல் - தோழி கூற்று.