பக்கம் எண் :

923ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை

77.யாழை முரித்தும், இருங்கதவம் தான் அடைத்தும்,
சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும், - தாழ்பொழில்சூழ்

78.கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்,
துங்கப் புரிசை தொகுமிழலை - அங்கதனில்

79.

நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்

முத்தின் சிவிகை முதல் கொண்டும், - அத்தகுசீர்

80.

மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக்(கு)

ஆயிரஞ் செம்பொ னதுகொண்டும், - ஆய்வரிய

81.

மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில்

ஆண்பனை பெண்பனைக ளாக்கியும், - பாண்பரிசில்

82.

கைப்பணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்

சப்பாணி கொண்டும் தராதலத்துள் - எப்பொழுதும்
83.நீக்கரிய இன்பத்(து) இராகமிருக் குக்குறள்,
நோக்கரிய பாசுரம், பல் பத்தோடு, - மாக்கரிய

84.யாழ்மூரி, சக்கரமாற்(று) ஈரடி, முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழி


வான் பொருள் - முடிநிலைப் பொருள். அது சிவஞானம் உடையவரை, உயர்வு தோன்ற. “சிவஞானம்” என்றே பாற்படுத்துக் கூறினார். “ஞானத்தின் திருஉருவை” எனச் சேக்கிழாருங் கூறினார்.1 65 - சீர்த் தத்துவம் - சிறந்த உம்மை. தத்துவன் - உண்மையை உபதேசித்தருள்பவன். நித்தன் - நிலையுடைய புகழ் உடம்பைப் பெற்றவன். தவர் - தவம் செய்வோர். வித்தகம் - சதுரப்பாடு; திறமை. இது சமண சமயத்தவரோடு வாதம் புரிகையில் இனிது விளங்கிற்று. விடலை - இளங் காளை; பதினாறு வயதிற்கு உட்பட்டவன். தெவ்வர் - பகைமை கொண்ட சமணர். அடல் - வலிமை. உரும் - இடி. தெவ்வரை, ‘பாம்பு’ என்னாமையால், இஃது ஏகதேச உருவகம். “சிங்கம், குஞ்சரம்” - என்பன காதற் சொற்கள்.2

68 - காலம், பொதுவாக ‘ஒன்று’ எனச் சொல்லப்பட்டாலும் நொடி, நாழிகை முதலாகவும், இறப்பு, நிகழ்வு, எதிர்வாகவும் பல ஆதலின் “காலத் தொகுதி” - என்றார். இதனால் முக்காலத்தையும்


1.பெரிய புராணம் -திருஞானசம்பந்தர் - 728.
2. தொல் - சொல் - 56.