102. | தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப் | | புழைத் தடக்கை கொண்டெறிந்து பொங்கி - மழை மதத்தால் |
103. | பூத்த கடதடத்துப் போகம் மிகப்பொலிந்த | | காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் - கோத்த |
104. | கொடுநிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித்(து) | | இடுவண்டை இட்டுக் கலித்து - முடுகி |
105. | நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகர் நீத்(து) | | இடிபெயர்த் தாளத்(து) இலுப்பி - அடுசினத்தால் |
106. | கன்ற முகம், பருக் கையெடுத்(து) ஆராய்ந்து | | வென்றி மருப்புருவ வெய்துயிர்த்(து) - ஒன்றிய |
107. | கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி | | நீடு பொழிலை நிகர் அழித்(து) - ஓடிப் |
108. | பணப்பா கரைப் பரிந்து குத்திப் பறித்த | | நிணப்பாகை நீள்விசும்பில் வீசி - அணைப்பரிய |
109. | ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக் காரர்கடாம் | | மாடணையக் கொண்டு வருதலுமே - கூடி |
‘நோக்கினோடு’ என ‘ஒடு’ உருபு விரிக்க. ‘உரும்’ இரண்டில் முன்னது ஆகுபெயராய் மேகத்தைக் குறித்தது. நடையின் வேகம் பற்றி காற்றோடு கூடிய மேகம் ஐய உவமையாகச் சொல்லப்பட்டது. குன்று - வடிவு பற்றியும், கடல் பரந்து தோன்றும் கருமை பற்றியும், உரும் (இடி) பிளிறும் குரல் பற்றியும், கூற்று (யமன்) கொலைத் தொழில் பற்றியும் உடன் வைத்து ஐயுறப்பட்டன. ‘தழல் உண்டாக விழித்து’ என ஒருசொல் வருவிக்க. “எதிர்ந்து” - என்றது, ‘முன் வருபவரை எதிர் நோக்கி’ என்றபடி. தால வட்டம், யானையின் காது. புழை - உள்ளே துளையை உடைய. தட - பெரிய (102) “கொண்டு” என்பது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு. எறிந்து - தாக்கி மழை மதம் உவமத் தொகை. பூத்த - பொலிவு எய்திய. யானைக்கு அதன் மத நீர் சிறப்பைத் தரும். கட தடம் - மத நீர் பாயும் வழி. ‘தடத்தை உடைய காத்திரம்’ என்க. போகம் - இன்பம். மதம் மிக்கு ஒழுகுதலால் அதனது போக நிலை மிக்கு விளங்கிற்று. காத்திரம் - உடல். கலித்து - ஆரவாரித்து. ‘எங்கும் கலித்து’ என மாற்றி யுரைக்க. கோத்த - கட்டிய. நிகளம் - சங்கிலி. போக்கி - அறுத்ததொழித்து. “இடு வண்டு” என்பதற்கு, ‘தலை யிடுகின்ற வண்டுகள்’ என்பது
|