110. | நயந்து குரல்கொடுத்து நட்பளித்துச் சென்று | | வியந்தணுகி வேட்டம் தணித்(து) ஆங்(கு) - உயர்ந்த |
111. | உடல்தூய வாசிதனைப் பற்றிமேல் கொண்(டு) ஆங்(கு) | | அடற்கூடற் சந்தி அணுகி - அடுத்த |
பொருளாகும். ‘யானை தனது மத நீரை நோக்கித் தன்மேல் வந்து மொய்க்கின்ற வண்டுகளைத் தும்பிக்கையால் பற்றிக் கீழே இட்டுத் தேய்த்தல் முதலியன செய்து கலிக்கின்றது - ஆர வாரித்தது’ என்க. நிலத்தை உழக்கி - பூமியைக் காலால் மிதித்துக் குழியாகவும், துகள்களாகவும் செய்து. நிகர் நீத்து - தனக்கு உவமையாக யாதொன்றும் இல்லாதபடி உயர்ந்து. இடி பெயர - தந்தத்தால் மதில் முதலியவற்றை இடித்தல் தொழில் விட்டு விட்டு எழச் செய்தலால். தாளத்து இலுப்பி - தாள வரிசையில் தனது உறுப்புக்களை உழல்விட்டு. இலுப்புதல் - இஃது ஒரு நாட்டுப் புற வழக்கு. சில இடங்களில் இஃது, ‘இளுப்புதல்’ என்று சொல்லப்படுகின்றது. அடு சினம் - எதிர்ப்பட்டோரைக் கொல்லும் அளவு எழுந்த சினம். கன்ற - மேலும் கரிதாக. ‘முகம் கன்ற’ என்க. பருக்கை யெடுத்து - பருத்த தும்பிக்கையை உயர எடுத்து. வென்றி மருப்பு உருவ - வெற்றியைத் தரும் தந்தங்கள் ஊடுருவும்படி, இதனை “வெய்து உயிர்த்து” என்பதற்குப் பின் கூட்டுக. வெய்து உயிர்த்தல் - வெப்பமாக (புகை யெழும்படி)ப் பெருமூச்சு எறிந்து. நிகர் - ஒளி; அழகு. முன்பு, “உழக்கி” எனவும், “இலுப்பி” எனவும் (105) எனப் பொது வாகக் கூறியதைப் பின்பு அவ்வப் பொருள்மேல் வைத்து, “அழித்து, குத்தி, வீசி” எனத் தனித்தனியாக வகுத்துக் கூறினார். பணம் - யானையை அடக்குவார் பயன் படுத்து ஓர் ஆயுதம். ‘அதனை யுடைய பாகர்’ என்க. பரிந்து - கிழித்து. நிணப் பாகும் - கொழுப்புக் குழம்பு. ஓடை - யானையின் நெற்றிப் பட்டம். பரிக்காரர்கள் - யானையின் இரு பக்கத்திலும் கோலைக் கையிற் கொண்டு நடத்திச் செல்லும் பரிக்கோற்காரர்கள் “காரர்கடாம்” என்னும் சீரில் ரகர ஒற்று அலகுபெறாது நின்றது. 110 கூடி - பலரும் திரண்டு, நயந்து குரல் கொடுத்து, அன்பை வெளிப்படுத்தும் முறையில் சில இனிய சொற்களைச் சொல்லி. வேட்டம் - வேட்கை; இங்கு உணவு வேட்கை அதைத் தணித்தது ‘கரும்பு முதலியவகைகளைக் கொடுத்து’ என்க. “தணித்த” என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. தணித்த ஆங்கு - தணித்த அப்பொழுது. 111. வாசி - அளவு. இஃது யானைமீது ஏறுதற்குப் படியாக அதன் உடலில் இடப்படும் கருவியைக் குறித்தது. உடல் தூய வாசி - யானையின் உடலில் இடப்பட்ட தூய்மையான வாசி. மேல்
|