112. | பயிர்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி | | அயர்வு கெடஅணைத்(து)அ தட்டி - உயர்தரு |
113. | தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத் | | தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் - எண்டிசையும் |
114. | பல்சனமும், மாவும், படையும் புடைகிளர | | ஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர - மல்லற் |
115. | பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக் | | கருத்தோ(டு) இசைகவிஞர் பாட - விரித்த |
116. | குடைபலவும், சாமரையும், தொங்கல்களும் கூடிப் | | புடைபரந்து பொக்கம் படைப்பக் - கடைபடு |
117. | வீதி அணுகுதலும், மெல்வளையார் உள்மகிழ்ந்து | | காதல் பெருகக் கலந்தெங்கும் - சோதிசேர் |
கொண்டு - மேலே ஏறி, “கொண்டு” என்றே கூறினாராயினும் ‘கொள்விக்கக் கொண்டு’ என்பதே கருத்து என்க. கூடற் சந்தி - மதுரை நகரின் தெருக்கள் சந்திக்கும் இடம். 112. பயிர் - யானையைப் பழிக்கும் மொழி. புரசை - யானையின் கழுத்தில் இடும் கயிறு. அயர்வு - சோர்வு (113) தண்டு பேரோசை - வெளியே பரவிச் செல்லும் பெரிய ஒலி. இஃது ஆகுபெயராய் யானையின் இரு பக்கத்திலும் தொங்க விடப்பட்ட மணிகளைக் குறித்தது. தாள் கோது - இரு பக்கத் திலும் இரு மணிகளுக்குள்ளே கால்களைக் கோத்து, “சிறுத் தொண்டர்” என்பது இங்கே அப்பெயரை உடைய நாயனாரைக் குறியாது, காரணப் பெயராய் அடியவர் பலரையும் குறித்தது. பிறகு அணைய - பின்னால் வர. தோன்றுதல் - காணப்படுதல். 114. மா, ‘யானை, குதிரை’ - இரண்டிற் பொது. படை - மக்கள் திரட்சி. புடை கிளர - நாற்புறத்திலும் மிக்குத் தோன்ற, ஒல்லொலி - ஒல்லென் ஒலி, கடல் கிளா - கடல் பொங்கி வந்ததுபோலத் தோன்ற. மல்லல் - வளப்பம். 115. ‘தூரியம்’ என்பது, “தூரம்” என மருவி வந்தது. பரித் தூரியம் - குதிரையின்மேல் வைத்து முழக்கப்படும் வாத்தியம். படு பணிலம் - ஒலிக்கின்ற சங்கு. ஆர்ப்ப - ஒலிக்க, ‘கவிஞர் கருத்தோடு இசைபாட, கருத்து - பொருள் (116) தொங்கற்கள் - மாலைகள். “தொங்கல்களும்” என்னும் சீரில் லகர ஒற்று அலகு பெறாதாயிற்று. பொக்கம் - பொலிவு (பொங்கு + அம் = பொக்கம்.) (117) கடை படுவீதி - பல வாயில்கள் (பக்கங்களில்) பொருந்திய வீதி; மாட வீதி.
|