எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம் | 1347. | சரத மணமலி பரிசம் வருவன; | | தளர்வில் புகலிய ரதிபன் அதிதரு | | வரத னணி தமிழ் விரகன் மிகுபுகழ் | | மருவு சுருதிநன் மலையி னமர்தரு | | விரத முடையைநின் னிடையி னவள்மனம் | | விரைசெய் குழலியை யணைவ தரிதென | | இரதம் அழிதர வருதல் முனமினி | | யெளிய தொருவகை கருது மலையனே. | | 23 |
உரைப்பாளாய் வெறிவிலக்கிய துறையாகச் செய்யப் பட்டது. “நரை முது பெண்டீர்” என்பதை முதலிற் கொள்க. வெறி - வெறியாடுதல். மறி அடு தொழில் - யாட்டைப் பலியிடும் தொழில். குரவை - தெய்வத்திற்குக் குரவையாடுதல். இதனைச் சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவை முதலியவற்றான் அறிக. வெறி முதலிய “இவைகளை இன்று இனி (இப்பொழுதே) ஒழிமின்” - எனக் கூட்டுக. நசை - விருப்பம். அரவிந்தம் தாமரை. அஃது அதன் மலரால் ஆகிய மாலையைக் குறித்தது. இரண்டன் உருபு அணிதல் தொழிலினும் வரும் ஆதலால், “குழலியை அணிமின்” என்றாள். சரதம் - உண்மை ‘இவள் உறுவது ஓர் நசை உண்டு; அது தமிழ் விரகன் புயம் உறும் அரவிந்தம் (அதனைக்) குழலியை அணிமின்’ என முடிக்க. 1347.குறிப்புரை: இப்பாட்டு அகப் பொருட் களவியலில் தலைவனைத் தோழி வரைவு கடாதற்கண் பிறர் வரைவு உணர்த்திய துறையாகச் செய்யப்பட்டது. “மலையனே” என்பதை முதலிற் கொள்க. மலையன் - வெற்பன்; குறிஞ்சி நிலத் தலைவன் மண மலி பரிசம் வருவன. சரதம் - தலைவியை வரைந்து கொள்ளுதற்கு உரிய மிகுந்த பரிசப் பொருள்கள் வருவன ஆயினமை உண்மை. (அதனால்) தமிழ் விரகன் மலையின் அமர்தரு விரதம் உடையை நின் இடையின் அவள் மனம் - ஞான சம்பந்தனது மலையின் கண் விருப்பம் வைத்தலையே விரதமாக உடைய நின்னைப் பற்றி அவளது (தலைவியது) மனத்தில் எழுந்துள்ள எண்ணம். விரை செய் குழலியை அணைவது அரிது என - ‘இனித் தலைவன் தன்னைச் சேர்தல் இயலாது’ என்பதாய் இருத்தலால். அழிதர இரதம் வருதல் முனம் எளியது ஒருவகை. இனி கருது - அவள் இறந்து படும்படி அயலாரது தேர் இங்கு வந்து சேர்தற்கு முன்பு எளிதில் அதை மாற்றுதற்கு ஒரு வழியை நீ இப்பொழுதே எண்ணி முடிப்பாயாக. அதி தரு வரதன் - மிகுதியாகத் தரும் வரத்தை உடையவன். சுருதி - தமிழ் மறை. அமர் - அமர்தல்; விரும்புதல்; முதனிலைத் தொழிற் பெயர். “விரை செய் குழலி” என்பது தோழி கூற்றாய்
|