பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை958

எழுசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

1346.இனியின் றொழிமினிவ் வெறியும், மறியடு

தொழிலும் மிடுகுர வையுமெல்லாம்

நனிசிந் தையினிவள் மிகவன் புறுவதொர்

நசையுண்(டு) அதுநரை முதுபெண்டீர்!

புனிதன் புகலிய ரதிபன் புனைதமிழ்

விரகன் புயமுறு மரவிந்தம்

பனிமென் குழலியை யணிமின்; துயரொடு

மயலுங் கெடுவது சரதம்மே.

22



 மறக் குடியில் பிறந்தோர் சினந்து கூறும் கூற்றாகச் செய்யப்படும். ‘காஞ்சி’ என்னும் புறத் திணையுள் இது ‘மகட்பாற் காஞ்சி’ - என்னும் துறையாம். மறக்குடியாவது. வழிவழியாகப் படைவீரராகும் தொழிலை யுடைய குடி. கோவின் திருமுகம் - அரசன் விடுத்த ஓலை. மீதொடு வரு தூதுவ - அஃது உன் தலை மேற் காணப்பட வருகின்ற தூதனே. இவர் மா வீரியர் - இங்குள்ளார் பெரிய வீரர்கள். இவர் தங்கை பரிசம் - இவர்களுக்குத் தங்கியாகிய இவளுக்குப் பரிசமாவன (பரிசம் - மணம் கொள்வார் அதன் பொருட்டு மணப் பெண் வீட்டாருக்குத் தரும் பொருள்) ஈரக் குளிர் பைம்பொழில்களையுடைய வளநாடும் எழில் விளங்கும் நீதிக் குவையும் ஆகும். ஈ - இவைகளை நீ இப்பொழுதே கொடு. மகுடன் திறமண அம் என் - முடியரசனாகிய உம் வேந்தன் கூற்றில் நிகழ்த்தும் மணவினையின் அழகு என்னே! (ஓர் ஓயும், தூதுவனுந் தானோ?) பழிச் சத அவ் அரசன் மற வெங்குலம் அறிகின்றிலன் - பழியை நிலையாகப் பெற்றுள்ள அந்த அரசன், ‘மறவர்களது கொடிய குலம் எத்தன்மையது’ என்பதை அறிகின்றிலன். “(இவ் வோலை) தமிழ் விரகனும், அருகாசனியு மாகிய சம்பந்தனது ஆணை ஓலை அன்று என்பது தெளிவாதலால், நமர்காள்! தூ ஏரியை மடுமின் - இப்பொழுதே இவ்வரசனது நாட்டில் உள்ள தூய நீர்தேங்கும் ஏரிகளைத் தூர்மின்! துடி (பறைகளை அடிமின்! படைஎழுமின்! தொகு சேனையும், அவ் அரசனும் ஒரு சேர அழியும் படி போர் புரியும் நிலைமைதான் இனி. (வேறு எதுவும் இல்லை.) என உரைக்க. “பழி அச்சத அரசன்” என்பதில் அகரச் சுட்டினை, “அரசன்” என்பதனோடு புணர்க்க. சதம் - நிலைத் திருத்தல் ‘பழி நிலைபெற்ற அவ் அரசன்’ என்க.

1346. குறிப்புரை: இப்பாட்டு, பாடாண் திணைக் கைக்கிளையுள், தலைவியது ஆற்றாமையால் தோன்றிய வேறுபாட்டினைச் செவிலியும், நற்றாயும் தெய்வத்தான் ஆயதாகக் கருதி வேலனை வருவித்து வெறியாடுவிக்கத் தோழி உண்மை