பக்கம் எண் :

957ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

1344.வன்பகை யாமக் குண்டரை வென்றோய்!

மாமலர் வாளிப் பொருமத வேளைத்

தன்பகை யாகச் சிந்தையுள் நையும்

தையலை யுய்யக் கொண்டருள் செய்யாய்;

நின்புகழ் பாடிக் கண்பனி சோரா

நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்(டு)

அன்பக லாமெய்ச் சிந்தைய ரின்பாம்

அம்பொழில் மாடச் சண்பையர் கோவே.

 20

மறம் - எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

1345.கோவின்திரு முக மீதொடு வருதூதுவ! ஈரக்

குளிர்பைம்பொழில் வள நாடெழில் நிதியம்பரி ஈசம்

மாவீரிய ரிவர் தங்கையென் மகுடன்திற மணஅம்!

மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்

பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்

பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்

தூவேரியை மடுமின்!துடி யடிமின்;படை யெழுமின்;

தொகுசேனையு மவனும்பட மலையும்பரி சினியே.

21



வாசம் - நறுமணம். திரை - கடல் அலை. சேவல் சேரும் அன்றில் - அது, சேவலை அழைக்கும் குரலைக் குறித்தது. ஆகுபெயர். வேய் - வேய்ங்குழல். மாலையில் இஃது ஆயரால் ஊதப்படுவது. கூடி - இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து. “திரை, வாடை” - என்பவற்றிலும் எண்ணும்மை விரிக்க. தென்றலையும் வாடையையும் ஒருங்கு கூறியது, ‘தென்றற் காலத்தில் தென்றலும் பகையாகின்றது; வாடைக் காலத்தில் வாடையும் பகையாகின்றது’ என்றபடி.

1344.குறிப்புரை: இப்பாட்டு, பாடாண் கைக்கிளையுள் தலைவிக்குரிய தூதாகிச் சென்ற தோழி கூறும் ‘தூதிடையாடல்’ - என்னும் துறையாகச் செய்யப்பட்டது. “நின்புகழ் பாடி” என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. “நின்புகழ் பாடி... மெய்ச் சிந்தையர்” - எனப்பட்டார் ஞானசம்பந்தர்க்கு அன்பராய நல்லோர். ‘இன்பாம் கோ’ என இயைத்து, ‘அவர் இன்புறுதற்குத் துணையாம் தலைவனே’ என உரைக்க.

1345.குறிப்புரை: ‘மறம்’ என்பதும் கலம்பக உறுப்புக்களுள் ஒன்று. இது தம்மை மதியாது தம் மகளை எளிதில் தனக்குக் கொடுக்கும்படி ஓலை கொடுத்து விடுத்த தூதனைக் கண்டு மறவர்