பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை956

எழுசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

1342.சயமி குத்தரு கரைமு ருக்கிய தமிழ்பயிற்றிய நாவன்
வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் நீதன்
கயலு டைப்புனல் வயல்வ ளத்தகு கழும லப்பதி நாதன்
இயலு டைக்கழல் தொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே.

பன்னிருசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

1343.மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத

வேரிவண் டறைசோலை யாலைதுன் றியகாழி

நாதனந் தணர்கோனெ னானைவண் புகழாளி

ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை

நீதியன்றின பேசும் யாயுமிந் துவும்வாசம்

நீடுதென் றலும்வீணை யோசையுங் கரைசேர

மோதுதெண் திரைசேவல் சேருமன் றிலும்வேயும்

மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே,

19



திறமையாக நான் குறிப்பிடவில்லை. கவுணியர் திலகன் இணைக் கழலைத் தொழுது துதித்த பின்பும் ஒருவருக்குத் துன்பம் வருவிப்பேன். நான் இதுதான் குறிப்பிட விரும்பிய அரிய வித்தை.

இவ்வாறு சொல்லப்படுவதை உண்மையோடு பொருந்திய சிலேடையாகச் செய்வது உண்டு. இங்கு அவ்வாறில்லை. ‘மிடற்றில்’ என இரட்டி வந்த ஒற்றுச் சந்தம் பற்றித் தொகுக்கப்பட்டது.

1342. குறிப்புரை: முருக்கிய தமிழ் - வாதில் வென்று அழித்த தமிழ்ப் பாடல். வியல் இயல் - இடம் அகன்ற இயல்பை உடைய. நீதன் - நீதியை உடையவன். இயல் - அழகு.

1343. குறிப்புரை: இப்பாட்டு, பாடாண் கைக்கிளையுள் தலைவி இரவு நீடு பருவரலின் வகையாகிய திங்கள் முதலிய இனியனவற்றை இன்னாதனவாகக் கண்டு நோதல் துறையாகச் செய்யப்பட்டது. மேதகு - மேன்மை தக்கிருக்கின்ற. பூகம் - பாட்டு மரம். நாகம் - புன்னை மரம். சூதம் - மாமரம். பூகம் முதலிய நான்கும் உம்மைத் தொகை ‘இவைகளையுடைய சோலை’ என்க. வேரி - தேன். ஆலை - கரும்பு ஆலை. துன்றிய - நெருங்கிய. தார் - மாலை. “அயர்வேனை” என்னும் இரண்டன் உருபை நான்கன் உருபாகத் திரிக்க. நீதி அன்றின - நியாயத்தோடு மாறுபட்ட சொற்கள். அவை தக்க தலைவனைக் காணின் கன்னியர்க்கு மனம் செல்லும் என்பதை அழித்துச் சொல்லும் சொற்கள். யாய் - என் தாய். இந்து - திங்கள்.