நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே | நன்னுதலா ளயர்கின்றாள் நடுவே நின்றும் | இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா | என்செயநீ ரலர்தூற்றி எழுகின் றீரே. | 16 |
சம்பிரதம் - வேறு 1341. | எழுகுலவெற்பிவை மிடறி லடக்குவன் | | எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில் | | முழுது மொளித்திர வியையிந்நிலத்திடை | | முடுகுவ னிப்பொழு திவையல விச்சைகள் | | கழுமல நற்பதி யதிப தமிழ்க்கடல் | | கவுணிய நற்குல திலக னிணைக்கழல் | | தொழுது வழுத்திய பிறகொரு வர்க்குறு | | துயர்வரு விப்பனி தரியதொர் விச்சையே. | | 17 |
செய்யப்பட்டது. “இவள் என்பதை முதலிற் கொள்க. மனம், நிறை, (நிலை கலங்காமை) கலை (உடை) மணி நிறம் (அழகிய நிறம்) கை வளை இவைகளைக் கவர்ந்தவன் சண்பையர் கோன். சண்பை நகர் தனத்தை (கைப் பொருளை)க் கொண்ட பெருஞ் செல்வத்தையும், கீர்த்தியையும் உடையது. சம்பந்தன் பொருட்டாக. நனம் கொண்டு - அகலம் பொருந்தி. நடுவே - சண்பையர் கோனுக்கும் இவளுக்கும் இடையிலே. “நின்றும்” என்னும் உம்மைச் சிறப்பு. இனம் - கூட்டம்.s “மடவீர்” என்பதை, “அயர்கின்றாள்” என்பதன் பின்னர்க் கூட்டுக. எழுகின்றீர் - திரிகின்றீர்கள். 1341.குறிப்புரை: ‘சம்பிரதம்’ - என்பது கலம்பக உறுப்புக்களில் ஒன்று. இது ‘சித்து’ என்றும் சொல்லப்படும். இஃது, ‘உலகர் வியக்கத்தக்க அற்புதங்களைச் செய்து காட்ட வல்லோம்’ எனச் சாலவித்தை காட்டுவோர் கூறும் கூற்றாகச் செய்யப்படும். நிலத்தில் ஏழு தீவுகளைச் சூழ்ந்துள்ள ஏழு மலைகள் ‘குலாசலம்’ என்று சொல்லப்படும். நாவலந் தீவின் எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும் அவ்வாறு சொல்லப்படும். மிடறு - கழுத்து; தொண்டை. குளறுதல் - குழப்பிச் சேறாக்குதல். இரவி சூரியன். முடுகுவன் - விரைந்து வீழச் செய்வேன். விச்சைகள் - வித்தைகள். “ஏழு குலமலைகளையும் என் தொண்டைக்குள் அடக்குவேன்; கடல் நீரைக் கலக்கிச் சேறாக்கிக் குடித்து, அதன்பின் கடலில் தோன்றி மறையும் சூரியனைப் பூமியிலே (கிழக்கும், மேற்குமாக) உலாவச் செய்வேன்; இப்பொழுது இவைகளை ஒரு
|