அறுசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம் 1339. | மங்கை யிடத்தர னைக்கவி நீரெதி ரோட மதித்தருள்செய் தங்கு புகழ்ச்சதுர் மாமறை நாவளர் சைவசி காமணிதன் துங்க மதிற்பிர மாபுரம் மேவிய சூழ்பொழில் நின்றொளிர்மென் கொங்கை யுடைக்கொடி யேரிடை யாள்குடி கொண்டன ளெம்மனமே. |
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1340. | மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு | | மணிநிறுமு மிவள்செங்கை வளையுங் கொண்ட | | தனங்கொண்ட பெருஞ்செங்கை திகழுங் கீர்த்திச் | | சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு |
பொழியா நின்றன). குயின் - மேகம். ‘மேகம் பொய்யாது பொழிதல் நல்லவர் வாழ்தற் பொருட்டு’ என்பர். ஆதலின், ‘ஞானன் நிகழ்வான் குயின் துளி பொழியா நின்றன’ என்றார். தார்க் கொன்றைகள் - மாலை போலப் பூக்கின்ற. கொன்றை மரங்கள் - இவை கார்க் கொன்றை. புலம் - நிலம்; முல்லை நிலம் ‘புலத்தின் கண்’ என ஏழாவது விரிக்க. துன்றின - பூக்கள் நெருங்கப் பெற்றன. ‘கலை மான்கள் - பிணை மான்களோடு ஒன்றின’ என்க. ‘இவை யெல்லாம் நிகழ்ந்தும் குறித்த வண்ணம் வந்திலது’ என்னும் பழியைக் கொண்டதாகிய நமரது (நம் தலைவரது) தேர் அன்பொடும் அருகே வந்தது; மங்கையே! அது காண் - என்க. “வந்தது” என்பதன் ஈற்றுக் குற்றிய லுகரம் முற்றிய லுகரம் ஆயது செய்யுளியல்பு. 1339.குறிப்புரை: இப்பாட்டு, அகப்பொருட் களவியலில் பாங்கற் கூட்டத்தில் தன்னை உற்றது வினாவிய பாங்கனுக்குத் தலைவன் “உற்றது உரைத்தல்” என்னும் துறையாகச் செய்யப்பட்டது. ‘மங்கையை இடத்துக் கொண்ட அரன்’ என்க. “அருள் செய்து” என்பது, ‘பாடி’ என்னும் பொருட்டாய், “அரனை” என விரிந்தும், “கவி” என்பதில் தொக்கும் நின்ற இரண்டன் உருபுகட்கு முடிபாயிற்று. மதித்து - நிச்சயித்து நீர் எதிர் ஓடக் கவி அருள்செய்தது சமணரொடு செய்த வாதத்தில். ‘அருள் செய் சைவ சிகாமணி’ என இயைக்க. “கொடியேர்” என்பதில் ஏர், உவம உருபு. 1340. குறிப்புரை: இப்பாட்டுப் பாடாண் கைக்கிளையில் தலைவியை ஆற்றுவிக்கும் தோழி அவர் அறிவித்தலை அயற் பெண்டிரை நோக்கிக் கூறும் முன்னிலைப் புறமொழியாகச்
|