பக்கம் எண் :

953ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

1338.ஒழியா(து) இன்புறு பொழில்சூழ் சண்பைமன்

உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்

எழிலா ருங்கவு ணியர் தீ பன்திகழ்

இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்

பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்

புலமே துன்றின; கலைமா னொன்றின;

பழிமேல் கொண்டது நமர்தே ரன்பொடும்

அருகே வந்தது அதுகாண் மங்கையே.



பூசிக்கொண்டு எருக்கம் பூ மாலை அணிந்து கொண்டு, தலைவியின் உருவம் எழுதப்பட்ட படத்துடன் பனைமடலால் செய்யப்பட்ட குதிரைமேல் ஏறி, “இவள் மேல் யான் வைத்த காதல்’ கரை இறந்தமையால் யான் இறக்கின்றேன்” என்று சொல்லிப் பறையை அடித்துக் கொண்டு தெருக்களில் எல்லாம் சுற்றி வருதல் மடல் ஏறுதல் ஆகும். இவ்வாறு ஒருவன் மடல் ஏறி வருவானாயின், ‘காதல் மிகுதியால் அவன் இறந்து விடுவானா’ என்பது பல சோதனைகளால் அறியப்படுமாயின் அத்தலைவியை ஊரார் வலிந்து அவனுக்கு மணம் செய்வித்தல் அக்காலத்தில் உலக நீதியாய் இருந்தது. அதனால், தனக்குக் குறை நேராத தோழியை, “நின் நிலைமை இதுவாயின், மடல் ஏறுவது தவிர எனக்கு வேறு வழியில்லை” எனத் தலைவன் கூறி அச்சுறுத்துவான் மடல் ஏறிய தலைவனை ஒருத்தி மணப்பதும், அதற்குப் பெற்றோர், தமையன்மார் இசைவதும் மானம் போனபின் செய்யும் செயலாகவும் அக்காலத்தில் கருதப்பட்டது. புலி ஏறு கவி நீரர் - நிலவுலகத்தில் மேம்பட்டு விளங்குகின்ற கவிகளைப் பாடும் தன்மை யுடைய புலவர்கள். ‘பெருமான்றன் காழி’ என இயையும். தடம் - தடாகங்கள். மாடு - பல பக்கங்கள். ‘மாடு தடம் மிகு காழி’ என இயைக்க. ‘காழித் தகு பேதை’ - என்பதில் சந்தி ஒற்றுச் சந்தத்தின் பொருட்டுத் தொகுக்கப்பட்டது. பேதை - தலைவி. அருளாமை - இரங்காமை. திடம் - திண்ணம். நீறு - சாம்பல். ஆடி - முழுகி. வரு காதல் - வர விரும்பும் விருப்பம்.

1338.குறிப்புரை: இப்பாட்டு அகப்பொருள் கற்பியலில் பருவம் குறித்துப் பிரிந்து சென்ற தலைவன் வாராது நீட்டிக்கப் பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகளுக்குத் தோழி தலைவன் குறித்த பருவத்தே வந்தமை கூறிய துறையாகச் செய்யப்பட்டது. மன் - தலைவன். உயர் பார் - உயர்ந்ததாகிய வீட்டுலகம். துன்றிய ஞானம் - அதனை அடைதற்கு ஏதுவாய் உள்ள உணர்வு. “செங்கரன்” என்பதற்கு, ‘தாளம் ஏந்திய சிவந்த கைகளை உடையவன்’ என உரைத்து, நிகழ்வான் - இனிது வளர்தற் பொருட்டு (க் குயின் துளி