பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை952

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1336.ஆர்மலி புகலி நாத னருளென இரவில் வந்(து)என்
வார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போன
தேரத ரழிய லும்மைச் செய்பிழை யெம்ம தில்லை
கார்திரை கஞலி மோதிக் கரைபொருங் கடலி னீரே.

12

சந்தக் கலி விருத்தம்

1337.

கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்

தடமாடு மிகுகாழி தகுபேதை யருளாமல்

திடமாகி லணிநீறு செழுமேனி முழுதாடி
மடலேறி யெழில்வீதி வருகாத லொழியேனே.

13



கூற்றாகவே அமைதல் உண்டு. ஆயினும் இங்கு இது கள்ளுண்டோன் பிதற்றும் பிதற்றுரையாகவே அமைந்துள்ளது. அதனால் இப்பாட்டில், “ஆன புகழ்ப் பயில்... வண் களியேன் எளியேனோ” என்னும் பகுதி தவிர, ஏனைய பகுதி முழுதும் பொருள் படாப் பிதற்றுரைகளாம். “அத்தகு” என்பதில் அகரம் பண்டறி சுட்டாய், இயல்பாய் உள்ள சிறப்பினைச் சுட்டிற்று. மைப் புரையும் கார் - மைபோலும் கரிய மேகம்.

1336.குறிப்புரை: இப்பாட்டு, அகப்பொருட் களவியலில் ஒருவழித் தணந்த தலைமகன் வரவு நீட்டித்தமையால் தலைவி ஆற்றாது அஃறிணைப் பொருள்களை நோக்கிக் கூறும் காமம் மிக்க கழிபடர் கிளவிகளில் கடலை நோக்கிக் கூறியது. ஆர் - அழகு. புகலி நாதன், ஆளுடைய பிள்ளையார். வார் - கச்சு. பயலை - பசலை. தேர் அதர் - தேர் சென்ற வழி; என்றது அவ்வழியைக் காட்டும் சக்கரப் பதிவுப் பள்ளத்தை. அழியல் - அழிக்காதே. இது பன்மை யொருமை மயக்கம். கடலுக்கு மக்கள் செய்யும் பிழை அவற்றில் உள்ள முத்து முதலிய விலையுள்ள பொருள்களைக் கவர்ந்து கொள்ளுதல். “உம்மை” என்னும் இரண்டன் உருபை, ‘உமக்கு’ என நான்கன் உருபாகத் திரிக்க. ‘எமது’ என்பது, “எம்மது” என விரித்தல் பெற்றது. கஞலி - நெருங்கி.

1337.குறிப்புரை: இப்பாட்டு, அகப் பொருட் களவியல் பாங்கியிற் கூட்டத்துள் பாங்கியை இரந்து அவள் குறை நேராமையால் ‘மடல் ஏறுவன்’ என அச்சுறுத்தும் ‘மடல் மா கூறுதல்’ என்னும் துறையாகச் செய்யப்பட்டது. மடல் மா - பனை மடலால் செய்யப்பட்ட குதிரை. தலைவன் ஒருவன் தன்னால் காதலிக்கப்பட்ட தலைவி யொருத்தியை எவ்வாற்றானும் பெற இயலாத நிலை தோன்றினால் அவன் உடலில் சாம்பலை நிறையப்