பக்கம் எண் :

951ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1334.

பிரானை மெய்த்திரு ஞானசம் பந்தனை மறையவர்பெருமானைக்
குராம லர்ப்பொழிற் கொச்சையர் நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்
தராத லத்தினி லவனருள் நினைவொடு தளர்வுறு தமியேனுக்(கு)
இராவி னைக்கொடு வந்ததிவ் அந்திமற்(று) இனிவிடி(வு) அறியேனே.

பதினான்கு சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

1335.ஏனமு கத்தவ புத்தரை யிந்திர சித்து மணம்புணர் வுற்றான்

ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர்

தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்;

சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப்பரிசுண்டே

ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரையுங்கார்

ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களியேனெளி யேனோ

சோனக னுக்குமெ னக்குமெனத்தரை யம்மனை சூலது கொண்டாள்;

தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகிறாரே.



1334.குறிப்புரை: இப்பாட்டு, கவுணியர் தலைவர்பால் காதல் கொண்டாள் ஒருத்தி கூற்றாக - பாடாண் கைக்கிளை யாகச் செய்யப்பட்டது. அக்கைக்கிளையுள் இது கண்படை பெறாது கங்குலை நோதல் ‘கழலிணையை’ என இரண்டன் உருபு விரித்து, மேல் (பாட்டு-3) “சண்பையர் கோனச் சேவடி போற்றுவன்” என்றது போலக் கொள்க. அந்தி - எற்பாட்டுப் பொழுது. ‘சிவஞானமே உண்மை மெய்ஞ்ஞானம்’ என்றற்கு. “மெய்த் திரு ஞானம்” - என்றார்.

1335.குறிப்புரை: கலம்பக உறுப்புக்களுள் ஒன்றாகிய ‘களி’ - என்பது பற்றி வந்தது இப்பாட்டு. களி - களிப்பு; உணர்வழிந்த மயக்கம். கள்ளை உண்டு இவ்வாறான மயக்கத்தை எய்தினோன் கூற்றாக வருவதே ‘களி’ என்னும் உறுப்பு. அது பொருளுடைக்