கலித்தாழிசை | 1350. | ஆமாண்பொன் கூட்டகத்த வஞ்சொல் இளங்கிளியே! பாமாலை யாழ் முரியப் பாணழியப் பண்டருள்செய் மாமான சுந்தரன்வண் சம்பந்த மாமுனியெம் கோமான்தன் புகழொருகா லின்புறநீ கூறாயே கொச்சையர்கோன் தன்புகழ்யா னின்புறநீ கூறாயே. |
எழுசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம் | 1351. | கூற தாகமெய் யடிமை தானெனை யுடைய கொச்சையார் அதிபதி வீற(து) ஆர்தமிழ் விரகன் மேதகு புகழி னானிவன் மிகுவனம் |
வழியும் கடிய வாதலைக் கூறிச் செலவு விலக்கிய துறையாகச் செய்யப்பட்டது. அரி ஆரும் கிரி நெறி - சிங்கங்கள் நெருங்கியுள்ள இம் மலை வழியில் “தனித்து எங்ஙனம் வந்தீர்” என்க. “அழகிது” என்றது இகழ்ச்சிக் குறிப்பு. இனிப் பயம் இல்லை - இப்பொழுது அச்சம் இல்லை (ஆயினும் இனி) அந்திக்கு அப்பால் இடர் நிறைந்த சிறிய கொடிவழிகள் கண்ணிற்குப் புலப்படா. வாழ்வு இடம் - வாழும் ஆகிய. “இங்கே குழலியொடும் சிரமம் தீர்ந்து, விடியச் சென்று புகலிப் பதி இனிது மருவலாம்” என முடிக்க. விடிதலுக்கு ‘பொழுது’ என்னும் எழுவாய் வருவிக்க. 1350.குறிப்புரை: இப்பாட்டுப் பாடாண் கைக்கிளையுள் தலைவி தனது ஆற்றாமையால் அஃறிணைப் பொருள்களை நோக்கிக் கூறும் காமம் மிக்க கழிபடர் கிளவிகளுள் தான் வளர்க்கும் கிளியொடு கூறலாகச் செய்யப்பட்டது. கிளி பேசுந் தன்மை உடையதாதல் பற்றிக் காமம் மிக்க கழிபடர் கிளவிகளுள் இது சிறிது பயன் உடையதாகக் கொள்ளப்படுகின்றது. ‘மாண் பொன் ஆம் கூடு’ என மாற்றி, ‘பொன்னால்’ என ஆல் உருபு விரிக்க. கூட்டு அகத்த - கூட்டினுள்ளே இருக்கின்ற. அம் சொல் - அழகிய சொல்லைப் பேசுகின்ற. யாழ் முரியும்படியும் பாணர் வருந்தும்படியும் பண்டு பாமாலை (தேவாரம்) அருளிச் செய்த மா (பெரிய) மானம் (பெருமை) உடைய சம்பந்தன்’ என்க. கொச்சை - சீகாழி. “பாணர்” எனற்பாலது, “பாண்” - எனக் குடிப் பெயராகக் கூறப்பட்டது. பாணர் - திருநீலகண்ட யாழ்ப்பாணர். இவர் தமது யாழைத் தாமே முரிக்க முயலும்படி ஞானசம்பந்தர் பாடல் பாடினமையைத் திருத்தொண்டர் புராணத்துட் காண்க. ஈற்றடி நீண்டு வந்தமையால் இது கலித் தாழிசையாயிற்று. 1351.குறிப்புரை: இப்பாட்டு, அகப் பொருள் களவியலில் தலைவன் தோழியைக் குறையிரந்தவிடத்துத் தோழி அவனை
|