பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை962

சேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத்(து)
ஏறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே.

அறுசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

1352.சதுரன், புகலிய ரதிபன்,கூர் தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்
முதல்வன் புகலிய ரதிபன்தாள் முறைவந் தடையலர் நகரம்போல்,
எதிர்வந் தனர்விறல் கெடவெம்போர் எரிவெங் கணைசொரி புரிமின்;கார்
அதிர்கின் றன,இது பருவஞ்சே ரலர்தம் பதிமதி லிடிமின்னே.


மறுத்துச் சேட்படுக்கும் வகைகளுள் தலைவியது அருமை சாற்றற்கண் ‘இவளது பெற்றோர் இவளை ஏறு தழுவியவர்க்குக் கொடுப்பதாகச் சொல்லியபடி பறைமுழங்குகின்றது’ எனப் படைத்து மொழி கூறிச் சேட்படுத்ததாகச் செய்யப்பட்டது. ஏறு தழுவியவர்க்கு மகளைக் கொடுத்தல் முல்லை நில வழக்கு. கூறு - பங்கு. ‘என்னைத் தன் பங்கில் சேரும் வண்ணம் மெய்யடிமையாக உடைய அதிபதி’ என்க. ‘புகழினான் ஆகிய இவனது வனத்தின்கண்’ என உரைக்க. வனம் - காடு; முல்லை நிலம். சேறு - சந்தனக் குழம்பு. திரள் - திரண்ட. கணை - அழகு. “செழு முலை” என்பது சினையாகு பெயராய்த் தலைவியைக் குறித்தது. ‘செழு முலைக்கு உரியவன் ஏறு இது தழுவினார்’ என முரசு அதிரும் - என்க. ‘அது’ இரண்டும் பகுதிப் பொருள் விகுதிகள். ‘தான்’ இரண்டும் அசைகள்.

1352. குறிப்புரை: இப்பாட்டு, புறப்பொருளில் உழிஞைத் திணை முற்று முதிர்வுத் துறையைப் படைத் தலைவன் கூற்றாக்கிச் செய்யப்பட்டது. முற்று முதிர்வாவது கோட்டையை அணுகி முற்றுகையிட்ட படைகள் அம்முற்றுகையை வலுப் பெறச் செய்தலாம். சதுரன் - திறல் உடையவன். கூர் தவ சுந்தரம் - மிகுந்த தவமாகிய அழகு; (குல ஒழுக்கம்) ‘கவுணியர்தம்’ ‘முதல்வன்’ என இயையும். தாள் முறை வந்து அடையலர், திருவடி முறையாக வந்து அடையாதவர்கள் ‘நகரம் போல் ஆக என ஒரு சொல் வருவிக்க. “ஆக” என்பது “சேரலர்தம் பதி” - எனப்பின் வருவதைக் குறித்தது. சேரலர் - பகைவர். எதிர் வந்தனர் - எதிரில் போராட வந்தவர்கள். விறல் வெற்றி கெட - அழியும் படி ‘போரில்’ என ஏழாவது விரிக்க. “கணை சொரிமின்; மதில் இடிமின்” எனப் படைத் தலைவன் படைஞரை ஏவினான். ‘இடிமினே’ என வரற்பாலது, சந்தம் நோக்கி, “இடிமின்னே” என விரிந்து வந்தது. கார் - மேகம். “இது பருவம்” - என்றது, ‘பருவ நிலை வந்தது. இதுவாயினும் அது பற்றிச்சோர்தல்