எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம் | 1353, | மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன் மாடப் புகலி வேந்தன் துன்னும் ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய் பாடற் பதிக மன்னாள் பொன்னும் மாநல் தரள முந்தன் பொருக யற்கண் தனம்நி றைந்தாள் இன்னு மேகிப் பொருள்ப டைப்பான் எங்ங னேநா னென்ணு மாறே. | | 29 |
பன்னிருசீர்க்கழிநெடிற் சந்த விருத்தம் | 1354. | மாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும் வம்புபம்பு குழலுந் துங்க கொங்கை யிணையும்; |
கூடாது’ என்றபடி. மருதத்திணைக்கும், நெய்தல் திணைக்கும் பெரும்பொழுது வரைவின்மையால் மருதத்துப் புறனாகிய உழிஞைக்கு இங்குக் கார்ப் பருவம் வந்தது. முன் பாட்டின் இறுதிச் சொல் “அதிரும்” என்பதேயாயினும் சந்தி வகையால் “சதிரும்” என வந்தமையால் அஃதே பற்றி இப்பாட்டு, “சதுரன்” எனத் தொடங்கிற்று. இப்பாட்டுள் “புகலியர் அதிபன்” என்பது இருமுறை வந்துள்ளது. அஃது, ஏடு பெயர்த்து எழுதினோரது நினைவுக் குறைவால் ஏற்பட்ட தாகும். 1353.குறிப்புரை: இப்பாட்டு, அகப்பொருள் கற்பியலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் அதனை யறிந்து தலைவி ஆற்றாளாயது கண்டு செலவழுங்கிக் கூறிய துறையாகச் செய்யப்பட்டது. மாகத்து மின்னும் எழிலி - வானத்தின்கண் மின்னலை வீசுகின்ற மேகம். உம்மை, சிறப்பு. தலைவியது அருமைக்கு ஞான சம்பந்தரது திருப்பதிகத்தின் அருமையை உவமையாகக் கூறினான். அருமை - பெறுதற்கு அருமை. “அத்தகையாள் இறந்து பட நான் பிரிதல் எங்ஙனம்” - என்றான். “தலைவி தன் தனங்களில் பொன்னையும், கண்களில் தாளத்தையும் (முத்துக்களையும்) நிறைத்தாள் என்க. பொன் - பசலை நிறம். முத்து - கண்ணீர். எதிர் நிரல்நிறை. “பொன்னும் முத்தும் இங்கே நிரம்பக் கிடைத்துவிட்ட பின்பு, பொருள் தேட முயல்வது எற்றுக்கு” - என்பான், “இன்னும் ஏகிப் பொருள்படைப்பான்” என்றான் படைப்பான், பான் ஈற்று வினையெச்சம். 1354.குறிப்புரை: இப்பாட்டு, அகப்பொருட் களவியல் பாங்கற் கூட்டத்துள், தலைவன் பாங்கனுக்குத் ‘தலைவியது இடம், இயல்பு
|