பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை964

ஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும்,

ஒத்து கித்து நடையுஞ் சித்த பத்தி மிகையும்

வீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான்

வென்றி துன்று கழலி னொன்றி நின்ற பணியும்

தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும்

சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே.

 30

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1355.கைதவத்தா லென்னிடைக்கு

நீவந்த தறியேனோ? கலதிப் பாணா!



இவை’ எனக் கூறும் துறையாகச் செய்யப்பட்டது. “வீறது ஏறும், வயல் சூழ் காழி ஞான பெருமான்” என்பதை முதலில் வைத்து, அதனை “நீறு, பதிகம், பத்தி கழல்” என்பவற்றோடு இயைக்க. மாறு இலாத பொடி - விதிகட்கு மாறு படாப் பொடியாக அமைக்கப்பட்ட. நீறு கோலம், திரு நீற்றை அணிந்த அழகு. வம்பு பம்பு - நறுமணம் மிகுந்த. இந்நறு மணம் ‘இயற்கை நறுமணம்’ என்க. துங்கம் - உயர்ச்சி. “மூரி” என்பது எதுகை நோக்கி, “மூறி” எனத் திரிந்து நின்றது. மூரி - யாழ் மூரி. ஓசை - இசை; பண் நேச நுகர்வு - விருப்பத்தோடு துய்த்தல். மொத்துதல் - கால் தரையிற் சேர்தல். கித்து - தளர் நடை; மெல்ல நடக்கும் நடை. ‘கித்தாகிய நடை’ என்க. தேறல் - தேன். பரிசு - தன்மை இயல்பு. ‘இவைகளே என் சிந்தையைக் கவர்ந்த தன்மைகள்’ என்பதாம். நன்றி - நன்மை. ‘இவை அம்மங்கை தனது தவத்தால் பெற்ற நன்மைகளாம்’ என்றபடி. “தவம்” என்பது காரண ஆகுபெயராய், அதனால் விளைந்த பயனைக் குறித்தது. ‘ஞானப் பெருமான்’ என்பதில் சந்திப்பகர ஒற்றுச் சந்தம் நோக்கித் தொகுக்கப்பட்டது. “திருநீற்றுக் கோலமும், திருப்பதிகத்து விருப்பமும், குரு பத்தியும். ஆசிரியப் பணியும் நான் கண்ட தலைவிக்கே உரிய சிறப்புக்கள்” - என்பான் மகளிர்க்குரிய பொது இயல்புகள் சிலவற்றுடன் இவற்றைக் கூட்டிக் கூறினான். “இச்சிறப்பு அடையாளங்களே என் நெஞ்சு அவளிடம் சென்றமைக்குக் காரணம்” - என்பது குறிப்பு. திருக்கோவையாரில் சொல்லப் பட்ட தலைவன் தலைவியரும் இத்தன்மையாராகக் குறிக்கப் பட்டமை நினைக்கத் தக்கது. சுந்தரரைப் பரவையார் கண்ட பொழுதும் பல பொதுவியல்புகளைக் கூறி, “மின்னேர் செஞ் சடையண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ” என்னும் சிறப்பினைக் கூறியதாக அருளிய சேக்கிழார் திருமொழியும் இங்கு நினைக்கத் தக்கது.

1355.குறிப்புரை: இப்பாட்டு, அகப் பொருட் கற்பியலில் பரத்தையிற் பிரிவில் மீண்டு வந்த தலைவன் பாணனை வாயிலாக விடுத்துழித் தலைவி வாயில் மறுத்த துறையாகச் செய்யப்பட்டது.