| மெய்த்தவத்தா ருயிரனைய | மிகுசைவ சிகாமணியை வேணுக் கோனைச் | | செய்தவத்தால் விதிவாய்ந்த | செழுமுலையா ரவனுடைய செம்பொன் திண்டோன் | | எய்தவத்தால் விளிவெனக்கென்! | யாதுக்கு நீபலபொய் இசைக்கின் றாயே. | 31 |
மதங்கியார் எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம் | 1356. | இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன் | | இடுகர ணங்களி னியல்பும் வளம்பொலி; | | திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ் | | சிரபுர மன்றகு தமிழ்விர கன்பல | | நசைமிகு வண்புகழ் பயிலும் மதங்கிதன் | | நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின் | | வசை,தகு மென்குல மவைமுழு துங்கொள | | மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே. | | 32 |
“கலதிப் பாணா” - என்பதை முதலிற் கொள்க. கைதவம் - வஞ்சனை. அது ‘தலைவன் தவறிலன்’ என வலியிறுத்தற்குக் கூறும் பல பொய் மொழிகள். என் இடை - எனது இடம். அஃது இல்லம், வேணுபுரம், “வேணு” எனப் பட்டது. வேணுபுரக் கோனைத் தாங்கள் முற்பிற் செய்த தவத்தால் அத்தவத்தின் பயனாகத் தலைவனாக வாய்க்கப் பெற்றவர்கள் (இங்குள்ள) மலையார் (மலைவாணர்). அவர்கள் அந்த வேணுபுரக் கோனது திண் தோள்களையே தங்களுக்குப் பாதுகாவலாகக் கொண்டிருக்கின்ற காரணத்தால் அவர்கள் மகளாகிய எனக்கு எந்த ஒன்றினாலும் விளிவு (இறப்பு) உண்டாகாது. (ஆகவே, ‘தலைவன் தவறுடையான்’ என்பது தெரிந்தால் நான் இறந்துபடுவேன் - என்று கருதி) நீ ஏன் (‘தலைவன் தவறிலன்’ என்பதாகப்) பல பொய்மொழிகளைச் சொல்கின்றாய் (‘வேண்டா; உடனே திரும்பிப் போ) என்பது. இங்குக் கூறப்பட்ட பொருள். “தோள்” என்பது வீரத்தைக் குறித்துப் பின் அதனால் உண்டாகும் பாது காவலைக் குறித்தது. ஞான சம்பந்தரை புய வலிமை யுடையராகக் கூறியது சமணர் பலரை வென்றமை கருதி. 1356.குறிப்புரை: மதங்கம் (மிருதங்கம்) - மத்தளம், மதங்கியார் - மத்தளம் வாசிக்கும் பெண்மணியார். மத்தளத்தை மகளிர் வாசிக்கும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. இம்மகளிரும் பாணர் குலத்தவரே. அதனால் மத்தளத்தை வாசித்துக் கொண்டு
|