பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை966

வேறு

1357.வருகின் றனனென் றனதுள் ளமும்நின்

வசமே நிறுவிக் குறைகொண் டுதணித்(து)

அருகும் புனல்வெஞ் சரம்யா னமரும்

மதுநீ யிறையுன் னினையா தெனின்முன்

கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்

கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்

பெருகுந் திருவா ரருள்பே ணலர்போற்

பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே.

33



தெருக்கள்தோறும் போய்ப் பொருள் பெறுவது இவர்கட்குத் தொழிலாய் இருந்தது. ‘மதங்கி’ என்பது, “மாதங்கி” என்றும் வரும். இவ்வாறு தெருவிற் செல்லும் ஒருத்தியைக் கண்டு ஒருவன் கைக்கிளையாக (ஒருதலைக் காமமாகிக் காதலித்துக் கூறும் கூற்றே, கலம்பகங்களில் ‘மதங்கியார்’ என்னும் உறுப்பாகச் சொல்லப்படும் ‘மதங்கியார்’ என்பது உயர்வுப் பன்மை. ‘இதுவிதிங்கிவள்’ என வரற்பாலது செய்யுள் நோக்கி முற்றிய லுகரம் தொகுக்கப் பட்டு, “இதிங்கிவள்” என வந்து “இங்கிவள்” என்பது ஒரு சொல் நீர்மைத்து. மிடறு - கழுத்து. ‘இசையை முகந்து எழு மிடறும் இது’ என்றது, ‘இனிய குரலை உள்ளே உடைய கழுத்து’ என்றபடி. “இது” என்றதும், ‘இத்துணை அழகிதாய் உள்ளது’ என்றதேயாம். இடு காரணங்கள் - காட்டுகின்ற அபிநயங்கள். ‘பொலிவது’ என்பதில் இறுதி நிலை தொகுக்கப்பட்டது. சுலவும் - சூழ்ந்துள்ள. சிரபுர மன் - சீகாழிப் பதிக்குத் தலைவன். ‘தமிழ் விரகனது வண்புகழைப் பயிலும் (மிகுதியாகப் பாடுகின்ற) மதங்கி’ - என்க. நளிர் - குளிர்ச்சியை (மகிழ்ச்சியை)த் தருகின்ற. “இவளது கொங்கை, கண், நகைப்பு இவைகளைக் கண்டபின் தகுதிமிக்க எனது குலம் முழுவதையும் வசை கவர்ந்து கொள்ளும்படி, அறிவு மிகுந்த என் மனத்தில் மையல் கொண்டு கூறினான் என்க. “மதங்கிதன் குலம் தாழ்வுடையதாகலின் இவளை நான் விரும்புதல் என் குலம் முழுவதற்கும் வசையாம்” என்றபடி. மயங்கினவனுக்கு இயற் பெயர் ‘சொல்லப்படாமையால் இஃது அகப்புறக் கைக்கிளையாம். “இவளுடைய அவயவங்கள் மிக அழகுடையனவாய் இருத்தலுடன் இவள் பாடும் பொழுது தமிழ் விரகனது வளவிய புகழையே மிகுதியாகப் பாடுதல் குறிப்பிடத் தக்கது” என இவன் தன் மனத்தில் மையல் உண்டாதற்குரிய சிறந்த காரணத்தைக் கூறினமை காண்க.

1357.குறிப்புரை: இப்பாட்டு, அகப்பொருள் உடன் போக்கில் தலைவன் தலைவியது அசைவு (தளர்ச்சி) அறிந்து இருத்தல்’ -