பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
100

மண

மாணிக்கவாசகர் வரலாறு

மணிவாசகரிடம் ‘குதிரை கொண்டு மதுரை செல்லவேண்டுமே’ என்று தாங்கள் எண்ணிவந்த செயலை நினைவூட்டினர். மணிவாசகர் அவ்வுரைகளைக் கேளாதவராய் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருப்பதை அறிந்த பணியாளர் மதுரை மாநகருக்குச் சென்று பாண்டியனிடம் நிகழ்ந்தவற்றைத் தெரிவித்தனர்.

பாண்டியன் அழைப்பு :  

இச்செய்தியையறிந்த பாண்டியன் சினந்து திருமுகம் ஒன்று எழுதி அதை வாதவூரரிடம் சேர்ப்பித்து ‘அவரை அழைத்து வருக’ என ஆணையிட்டுச் சிலரை ஏவினான். பணியாளரும் திருப்பெருந்துறையை அடைந்து அரசன் அளித்த திருமுகத்தை அமைச்சர் பிரானிடம் கொடுத்து அரசன் கட்டளையை அறிவித்து நின்றனர். அதைக் கேட்ட வாதவூரர் தம் குருநாதரிடம் சென்று நிகழ்ந்ததை விண்ணப்பித்து நின்றார். குருநாதர் புன்முறுவல் பூத்து “அஞ்சற்க, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று மன்னனிடம் அறிவித்து விலையுயர்ந்த மாணிக்கக்கல்லையும் கையுறையாகக் கொடுக்க” எனக் கூறி மாணிக்க மணியை அளித்து விடை கொடுத்தனுப்பினார். வாதவூரரும் குருநாதரைப் பிரிய மனமில்லாதவராய்ப் பிரியா விடைபெற்று மதுரைக்கு எழுந்தருளினார்.

அரசவைக்கு வந்த மணிவாசகர் இறைவன் அருளிய மாணிக்க மணியை மன்னனிடம் கொடுத்து, ‘வருகின்ற ஆவணிமூல நாளில் குதிரைகள் மதுரை வந்தடையும்’ என்று கூறினார். அரசனும் சினம் மாறி மனம் மகிழ்ந்து அமைச்சரை அன்போடு வரவேற்று அருகிருத்தி அவரை மகிழ்வித்தான்.

மணிவாசகரை மன்னன் ஒறுத்தல் : 

ஆவணி மூலநாளை அரிமர்த்தனன் ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு இரண்டு நாள் முன்னர் அமைச்சருள் சிலர், ‘வாதவூரர் சொல்லியன அனைத்தும் பொய்யுரை; அவர் தங்களை ஏமாற்ற எண்ணுகின்றார். எடுத்துச் சென்ற பொருள்கள் அனைத்தையும் திருப்பெருந்துறையில் அரன் பணிக்காகச் செலவிட்டு விட்டார். அவர் கூறுவதை நம்ப வேண்டா” என்று கூறினர். பாண்டியன் ஒற்றர்களை விடுத்து அவர் மூலம் அமைச்சர்கள் கூறியன அனைத்து உண்மையென்பதை அறிந்தான். வாதவூரர் செய்கையை எண்ணிச் சினந்து தண்டநாயகர் சிலரை அழைத்து வாதவூரர் பால் சென்று குதிரை வாங்கக்கொண்டுபோன பொருள்கள் அனைத்தையும்