வற
மாணிக்கவாசகர்
வரலாறு
வற்புறுத்தித் திரும்பப் பெற்றுக்கொண்டு
வருமாறு கட்டளையிட்டான். அச்சேனைத் தலைவர்கள் வாதவூரரிடம் சென்று மன்னன் கட்டளையை எடுத்துக்கூறி
அவரைத் துன்புறுத்தத் தலைப்பட்டனர். கொடுஞ்சிறையில் இட்டனர். சுடுவெயிலில் நிறுத்திக்
கடுமையாக வருத்தினர். வாதவூரர் இறைவனைத் தியானித்து ‘ஐயனே! ஆவணி மூலத்தன்று குதிரை கொண்டு
வருவதாகக் கூறிய உன் உரை பொய்யாகுமோ? உன் அடித்தொண்டன் இவ்வாறு துன்புறுவது தகுதியா? நீ என்னைக்
கைவிடில் எனக்கு யார் துணை? அடியான் ஒருவன் துன்புறுவது உனக்குக் குறையல்லவா?’ என்றெல்லாம்
இறைவனிடம் முறையிட்டு வருந்தினர்.
நரிகள் பரிகளாயின :
வாதவூரர்தம் வருத்தத்தைத் தணிக்கத்
திருவுளம் கொண்ட பெருமான் நரிகளையெல்லாம் குதிரைகளாக மாற்றித் தேவர்களெல்லாம் குதிரைச்
சேவகர்களாய்ப் புடைசூழத் தான் குதிரை வாணிகன் போலத் திருக்கோலம் கொண்டு வேதமாகிய குதிரையில்
அமர்ந்து, மதுரையை நோக்கிப் புறப்பட்டான். குதிரைப் படைகள் மதுரை நோக்கி வருவதை ஒற்றர்கள்
மூலம் மன்னன் அறிந்தான். அவன் மனம் மகிழ்ந்தது. திருவாதவூரரைத் தவறாகத் தண்டித்துவிட்டோமோ?
என்று வருந்தி அவரை விடுவித்தான். அரசவையில் அவரை அன்போடு வரவேற்று முகமன்கூறி அருகிருத்தினான்.
பாண்டியன் பரிசு :
கடல் அலைகள்போல் வந்த
படைகளின் விரைந்த நடையால் எழுந்த புழுதிப் படலம் வானை மறைத்தது. குதிரைக்கூட்டம் மதுரை மாநகரை
அடைந்தது. வாணிகத் தலைவனாக வந்த சிவபிரான் பாண்டியன் முன்னிலையில் குதிரைகளனைத்தையும்
கொண்டு வந்து நிறுத்தினான். குதிரைகளைப் பல வகை நடைகளில் நடத்திக் காட்டியும், ஆடல்கள்
புரியச் செய்தும் பாண்டியனை மகிழ்வுறுத்தினான். பெருமகிழ்ச்சியடைந்த பாண்டியன் குதிரைத்
தலைவனுக்கு ஒரு பட்டாடையைப் பரிசாகக் கொடுத்தான். குதிரைத் தலைவனாக வந்த பெருமான் அப்பரிசைப்
புன்கையோடு தன் செண்டினால் வாங்கினான். தான் அளித்த பரிசை மரியாதைக் குறைவாகக் குதிரைத்
தலைவன் பெறுவதைக் கண்ட மன்னன் வெகுண்டான். அருகிலிருந்த வாதவூரர் ‘செண்டினால் பரிசு பெறுதல்
அவர்கள் நாட்டு வழக்கு’ என்று கூறி, மன்னன் சினத்தை மாற்றினார். பின்னர் குதிரை இலக்கணமறிந்த
புலவர்கள் குதிரைகளையெல்லாம் ஆராய்ந்து
|