க
மாணிக்கவாசகர் வரலாறு
கருத்துக்களை நிலைநாட்டுவதற்கு,
பலவேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும் கடைச் சங்க காலத்திற்குப்பின்
தொடங்கி 11-ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம்
என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளைத் தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம் கி.
பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து தருமை ஆதீனத் திருவாசக நூல் வெளியீட்டில் மகாவித்துவான்,
திரு. ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களுடைய கால ஆராய்ச்சித்
தொகுப்புரையின் ஒரு பகுதியைச்சுருக்கித் தருகின்றோம்.
“திருமலைக் கொழுந்துப் பிள்ளை
அவர்கள் முதல் நூற்றாண்டாகவும், பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும்,
மறைமலையடிகளார் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டாகவும், வில்ஸன்வுட் என்பவர் ஏழாம் நூற்றாண்டு
என்றும், ஜி. யு. போப் ஏழு, எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு என்றும், சூலின் வின்ஸன் 9 அல்லது
10-ஆம் நூற்றாண்டு என்றும், திரு. கௌடி 8லிருந்து10-ஆம் நூற்றாண்டுக்குள் என்றும், டாக்டர்
ரோஸ்ட்டு 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு என்றும், நெல்ஸன் 9-ஆம் நூற்றாண்டு என்றும், கே.ஜி.
சேஷய்யர் 3 அல்லது 4ஆம் நூற்றாண்டு என்றும், சீனிவாசப் பிள்ளை 9-ஆம் நூற்றாண்டு என்றும்
சி. கே. சுப்பிரமணிய முதலியார் மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர்”
மூவர்க்கு முந்தியவர் மணிவாசகர்
என்ற கருத்து பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த,
புறச்சமயம், புத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் புத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும்
இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில்
விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப்பபெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர்
மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம்.
அகச்சான்றுகள்
இறைவன் குருநாதனாய் எழுந்தருளி மணிவாசகரை ஆட்கொண்டது:
1-3, 1-59, 2-42,
2-101-126, 3-61, 63, 117, 119, 148, 149,
|