பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
127

1

இயற்கைப் புணர்ச்சி

1.2. ஐயம்

ஐயம் என்பது கண்ணுற்ற பின்னர் இங்ஙனந் தோன்றாநின்ற இம்மாது திருமகள் முதலாகிய தெய்வமோ அன்றி மக்களுள்ளாள் கொல்லோ வென்றையுறாநிற்றல். அதற்குச் செய்யுள் -

2. போதோ விசும்போ புனலோ
      பணிக ளதுபதியோ
  யாதோ வறிகுவ தேது
      மரிதி யமன்விடுத்த
  தூதோ வனங்கன் றுணையோ
      விணையிலி தொல்லைத்தில்லை
  மாதோ மடமயி லோவென
      நின்றவர் வாழ்பதியே.
 

2

______________________________________________________________

மகிழ்ச்சி தோன்றுமென்பது, என்போல வெனின், ஒருவன் தான்வழிபடுந் தெய்வத்தைப் பரவிய செய்யுட்களை யோதியுணர்ந்திருந்தானெனினும், அவற்றான் அத்தெய்வத்தை வழிபடும்போழ்து கண்ணீர்வார்ந்து மெய்ம்மயி்ர் சிலிர்ப்பக் காண்டும். அல்லதூஉஞ் சுற்றத்தாரது சாக்காடு முற்றவுணர்ந்தானேயெனினுஞ் செத்தாரிடனாக உரையாடினபொழுது துன்பமீதூரக் கலுழக்காண்டும்;  இவை போலவென்பது. ஆகலின் நினைப்பின்வழியதுரையாயினும் நினைப்பின் உரைப்பயன் விசேடமுடைத்தென்பது.

நெஞ்சின்மிக்கது வாய்சோர்ந்து சொன்னிகழுமென்பதனை இக்கோவையின் எண்வகை மெய்ப்பாட்டின்கண்ணுந் தந்துரைத்துக் கொள்க. பயனென்பது நெஞ்சினடுத்ததோர் மெய்ப்பாடு காரணமாகத் தன்வயினிகழ்ந்த சொல்லானெய்துவது. மெய்ப்பாடென்பது புறத்துக் கண்டதோர் பொருள் காரணமாக நெஞ்சின் கட்டோன்றிய விகாரத்தின் விளைவு. எழுவாய்க் கிடந்த இப்பாட்டு நுதலிய பொருள் பொழிப்பினாலுரைத்தாம். நுண்ணிதாக வுரைப்பான்புகின் வரம்பின்றிப் பெருகுமென்பது.

1.2.  தெரியவரியதோர் தெய்வமென்ன
    அருவரைநாடன் ஐயுற்றது.

    இதன் பொருள்: யமன் விடுத்த தூதோ - யமனால் விடுக்கப் பட்டதூதோ;  அனங்கன் துணையோ - வசித்தற்கரியாரை வசித்தற்கு