அனங
இயற்கைப்
புணர்ச்சி
அனங்கற்குண்டாயிற்றோர் துணையோ;
இணையிலி தொல்லைத் தில்லை மாதோ-ஒப்பில்லாதானது பழையதாகிய இத்தில்லைக்கண்
வாழ்வாரோர் மாதரோ; மட மயிலோ என நின்றவர் வாழ்பதி - மடப்பத்தையுடைய மயிலோவென்று
சொல்லும்வண்ணம் நின்றவரது வாழ்பதி; போதோ - தாமரைப்பூவோ; விசும்போ - ஆகாயமோ; புனலோ
- நீரோ; பணிகளது பதியோ - பாம்புகளது பதியாகிய நாகருலகமோ; யாதோ ஏதும் அறிகுவது அரிது -
யாதோ சிறிதுந் துணிதலரிது என்றவாறு.
யமன் தூதும், அனங்கன்றுணையும்,
மடமயிலும் ஐயநிலை யுவமைக்கணுவமையாய் நின்றன. தில்லைமாது: உவமிக்கப்படும்
பொருள். ஐயநிகழ்ந்தது திருமகள் முதலாகிய தெய்வமோ மக்களுள்ளாளோவென்றென்க. மக்களுள்ளாளாதல்
சிறுபான்மை யாகலிற் கூறிற்றிலர்.
தில்லைமாதோ வென்பதற்குத் தில்லைக்கண்
வாழ்வாரோர் மானுடமாதரோ வென்றுரைப்பாருமுளர். தில்லைமானுடமாது மகளிர்க்குவமையாகப் புணர்க்கப்படுவனவற்றி
னொன்றன்மையால் உவமையாகாது. உவமிக்கப்படும் பொருளெனின், ஐயமின்றித் துணிவாம். அதனால்,
தில்லைமாதோவென்பது மானுடம் தெய்வ மென்னும் வேறுபாடுகருதாது மகளிரென்னும் பொதுமை பற்றி நின்றது.
தில்லை நின்றவரெனக் கூட்டினுமமையும்.
தெய்வமென்ன - தெய்வமோ அல்லளோவென
மெய்ப்பாடு :
உவகையைச் சார்ந்த மருட்கை, என்னை,
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே
-தொல். பொருள். மெய்ப்பாட்டியல்
- 7
என்றாராகலின், ஈண்டு
வனப்பினது பெருமையை வியந்தா னென்பது. அவ்வியப்பு மருட்கைப்பாற்படும். பயன் : ஐயந்தீர்தல்.
|