1
இயற்கைப்
புணர்ச்சி
1.3. தெளிதல்
தெளிதல் என்பது ஐயுற்றபின்னர்
அவயவமியங்கக்கண்டு இவள் தெய்வமல்லளென்று தெளியாநிற்றல். அதற்குச் செய்யுள்-
3. பாயும் விடையரன் றில்லையன்
னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர்
வாடுந் துயரமெய்தி
ஆயு மனனே யணங்கல்ல
ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத்
தோளிச் சிறுநுதலே.
3
_________________________________________________________________
1.3. அணங்கல்லளென் றயில்வேலவன்
குணங்களைநோக்கிக் குறித்துரைத்தது.
இதன் பொருள்:
பாயும் விடை அரன் தில்லை அன்னாள் - பாய்ந்து செல்லும் விடையையுடைய அரனது தில்லையை
யொப்பாளுடைய; படைகண் இமைக்கும் - படைபோலுங் கண்கள் இமையா நின்றன ;
நிலத்து அடி தோயும்-நிலத்தின் கண் அடி தீண்டா நின்றன; தூமலர் வாடும்-தூய மலர்கள் வாடா நின்றன.
ஆதலின்-துயரம் எய்தி ஆயும் மனனே-துயரத்தையெய்தி ஆராயும் மனனே; அம் மாமுலை சுமந்து-அழகிய பெரியவாகிய
முலைகளைச் சுமந்து; தேயும் மருங்குல்-தேயாநின்ற மருங்குலையும்; பணை பெருந்தோள் - பணைபோலும் பெரிய
தோள்களையும் உடைய; இச்சிறு நுதல் அணங்கு அல்லள்-இச்சிறு நுதல் தெய்வம் அல்லள் எ-று.
துயரமெய்தி யாயுமனனே யென்றதனால்,
தெளிதல் கூறப்பட்டதாம், மெய்ப்பாடு; மருட்கையின் நீங்கிய பெருமிதம். என்னை,
கல்வி தறுக ணிசைமை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமித நான்கே
-தொல். பொருள் மெய்ப்பாட்டியல்
- 9
என்றாராகலின், தெளிதலுங்
கல்வியின் பாற்படும். பயன்: தெளிதல்.
|