பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
130

1

இயற்கைப் புணர்ச்சி

1.4 நயப்பு

   
நயப்பு என்பது தெய்வம் அல்லளென்று தெளிந்த பின்னர் மக்களுள்ளாள் என்று நயந்து இடை யில்லைகொலென்ற நெஞ்சிற்கு அல்குலும் முலையுங்காட்டி இடையுண்டென்று சென்றெய்த நினையாநிற்றல். அதற்குச் செய்யுள்-

4. அகல்கின்ற வல்குற் றடமது
       கொங்கை யவையவநீ
  புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே
       யிடையடை யார்புரங்கள்
  இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை
       யீசனெம் மானெதிர்ந்த
  பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ
       னம்மன்ன பல்வளைக்கே.

8

_________________________________________________

அவ்வகை தெய்வம் கொல்லோவென்றையுற்று நின்றான் இவ்வகை குறிகண்டு தெய்வமல்லள் மக்களுள்ளாளெனத் துணிந்தானென்பது. எனவே, தெய்வமல்லளாதற்குக் காரணம் இனையன குறியே வேற்றுமை இல்லை என்பது துணிவு.

1.4.  வண்டமர் புரிகுழ லொண்டொடி மடந்தையை
     நயந்த அண்ணல் வியந்துள் ளியது.

இதன் பொருள் அகல்கின்ற அல்குல் தடம் அது - அகலா நின்ற வல்குலாகிய தடம் அது; கொங்கை அவை - முலை அவை; நெஞ்சு அவம் நீ புகல்கின்றது என்னை - நெஞ்சே காரணமின்றி நீ சொல்லுகின்றதென்!; அடையார் புரங்கள் இகல் குன்றவில்லில் செற்றோன் - அடையாதார் புரங்களது இகலைக் குன்றமாகிய வில்லாற் செற்றவன்; தில்லை ஈசன்-தில்லைக்கணுளனாகிய வீசன்; எம்மான் - எம்முடைய இறைவன்; எதிர்ந்த பகல் குன்ற பல் உகுத்தோன் - மாறுபட்ட ஆதித்தனது பெருமை குன்றப் பல்லை உகுத்தோன்; பழனம் அன்ன பல்வளைக்கு இடை உண்டு - அவனது திருப்பழனத்தை யொக்கும் பல்வளைக்கு இடையுண்டு எ-று.

   
தடம் - உயர்ந்தவிடம். அல்குற்றடமது கொங்கையவை என்புழி அல்குற்பெருமையானும் முலைப்பெருமையானும்