பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
131

1

இயற்கைப் புணர்ச்சி

1.5. உட்கோள்

உட்கோள் என்பது மக்களுள்ளாளென்று நயந்து சென்றெய்த நினையாநின்றவன் தன்னிடத்து அவளுக்குண்டாகிய காதல் அவள் கண்ணிற்கண்டு தன்னுட் கொள்ளாநிற்றல். அதற்குச் செய்யுள்-

5.  அணியு மமிழ்துமென் னாவியு
      மாயவன் றில்லைச்சிந்தா
  மணியும்ப ராரறி யாமறை
      யோனடி வாழ்த்தலரிற்

____________________________________________________________

இடையுண்டு என்றவாறு அன்று; அல்குலும் முலையும் உண்மையான் இடை உண்டு என்றவாறு. அல்குற்றடமதுவென்றும் முலையவை யென்றும் பெருமை கூறியது அவை விளங்கித் தோன்றுதனோக்கி. இகல்குன்றவில்லிற் செற்றோனென்பதற்கு இகல்குறைய வில்லாற் செற்றோனெனினும் அமையும். நயந்த அண்ணல் - மக்களுள்ளாளென்று துணிதலால் நயந்த அண்ணல். உள்ளியது - கூட்டத்தை நினைந்தது. மெய்ப்பாடு; உவகையைச் சார்ந்த மருட்கை, வியந்துரைத்தலின். பயன்: ஐயந்தீர்ந்து மகிழ்தல்.

    இந்நான்கு பாட்டும் ஒருவர் உள்ளக் கருத்தை ஒருவர் அறியாதவொருதலைக் காமம் ஆதலிற் கைக்கிளைப்பால. அகத்திணையின்கண் கைக்கிளை வருதல் திணைமயக்காம்பிறவெனின், கைக்கிளைமுதற் பெருந்திணை இறுவாய் எழுதிணையின் உள்ளும் கைக்கிளையும் பெருந்திணையும் அகத்தைச் சார்ந்த புறமாயினும், கிளவிக் கோவையின் எடுத்துக்கோடற்கட் காட்சி முதலாயின சொல்லுதல் வனப்புடைமை நோக்கிக் கைக்கிளை தழீஇயினார். பெருந்திணை தழுவுதல் சிறப்பின்மையினீக்கினார். இது நலம் பாராட்டல்.

1.5.  இறைதிருக் கரத்து மறிமா னோக்கி
    யுள்ளக் கருத்து வள்ள லறிந்தது.

   
இதன் பொருள்மின்னும் பணியும் புரை மருங்குல் பெருந்தோளி படை கண்கள் - மின்னையும் பாம்பையுமொக்கும் இடையினையும் பெருந்தோளினையும் உடையாளது படைபோலும் கண்கள்; பிறழ பிறழ பிணியும் - பிறழுந்தோறும் பிறழுந்தோறும்