பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
132

இயற்கைப் புணர்ச்சி

   பிணியு மதற்கு மருந்தும்
       பிறழப் பிறழமின்னும்
   பணியும் புரைமருங் குற்பெருந்
       தோளி படைக்கண்களே.

5

______________________________________________________________

பொதுநோக்கத்தாற் பிணியும்; அதற்கு மருந்தும் - உள்ளக் கருத்து வெளிப்படுக்கு நாணோடுகூடிய நோக்கத்தால் அதற்கு மருந்தும் ஆகாநின்றன எ-று.

    அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் - எனக்காபரணமும் அமிழ்தும் என்னுயிருமாயவன்; தில்லைச் சிந்தாமணி - தில்லைக்கட் சிந்தாமணிபோல அன்பர்க்கு, நினைத்தவை கொடுப்போன்; உம்பரார் அறியாமறையோன் - அன்பரல்லாத தேவர்களறியாத வந்தணன்; அடி வாழ்த்தலரின் பிணியும் - அவனுடைய திருவடிகளை வழுத்தாதவரைப்போல உறும் பிணியுமெனக் கூட்டுக.

    அணியென்றார் அழகு செய்தலான். அமிழ்தென்றார் கழி பெருஞ்சுவையோடு உறுதிபயத்தல் உடைமையான். ஆவி யென்றார் காதலிக்கப்படும் பொருள்களெல்லாவற்றினுஞ் சிறந்தமையான். ஈறிலின்பம் பயக்கும் இறைவனோடு சார்த்த அணியும் அமிழ்தும் ஆவியும் இறப்ப இழிந்தனவே ஆயினும்,

    பொருளது புரைவே புணர்ப்போன் குறிப்பின்,
    மருளற வரூஉ மரபிற் றென்ப

என்பதனான் ஈண்டுச் சொல்லுவானது கருத்து வகையானும், உலகத்துப் பொருள்களுள் அவற்றினூங்கு மிக்கனவின்மையானும், உயர்ந்தனவாயுவமையாயின. உம்பராலென்பது பாடமாயின், உம்பரானறியப் படாதவெனவுரைக்க. பிறழப் பிறழும் என்பது பாடமாயின், பிணியும் மருந்தும் மாறி மாறி வரப்படைக்கண்கள் பிறழும் என உரைக்க. இஃது உட்கோள். இவை ஐந்தும் கைக்கிளை.

   
திணை:  குறிஞ்சி. கைகோள்: களவு. கூற்று: தலைமகன் கூற்று. கேட்பது: நெஞ்சு. நெஞ்சென்பது பாட்டின்கண் இல்லையாலோ வெனின் எஞ்சிற்றென்பதாம்;  வறிதே கூறினா னெனினுமமையும். இடம்: முன்னிலை. காலம்: நிகழ்காலம். எச்சம்: இப்பெருந்தோளி படைக்கண்களென்புழி இவ்வென்னுஞ் சுட்டுச்சொல்லெஞ்சிற்று, மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த பெருமிதம். ஈண்டு மெய்ப்பாட்டுப் பொருள்கோள் கண்ணினான் யாப்புறவறிதல். என்னை,