1
இயற்கைப்
புணர்ச்சி
1.6. தெய்வத்தை மகிழ்தல்
தெய்வத்தை மகிழ்தல் என்பது உட்கொண்டு
நின்று, என்னிடத்து விருப்பத்தையுடைய இவளைத்தந்த தெய்வத்தை அல்லது வேறொரு தெய்வத்தை யான்
வியவேனெனத் தெய்வத்தை மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
6. வளைபயில் கீழ்கட
னின்றிட
மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நய
வேன்தெய்வ மிக்கனவே.
6
_______________________________________________________________
கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி
னுணரு
முணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியி
னன்னயப் பொருள்கோ ளெண்ணருங்
குரைத்தே.
-தொல்.பொருள். மெய்ப்பாட்டியல்
- 27
என்றாராகலின். பயன்: தலைமகளது
குறிப்பறிந்து மகிழ்தல், பிணியுமதற்கு மருந்துமாம் பெருந்தோளி படைக்கண்களென் றமையின்,
அவளுடம்பாட்டுக் குறிப்பு அவள் நாட்டத்தானுணர்ந்தானென்பது. என்னை,
நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரை
யாகும்.
-தொல். பொருள். களவியல்
- 5
என்றாராகலின்.
1.6. அன்ன மென்னடை அரிவையைத்
தந்த
மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து
ரைத்தது.
இதன் பொருள்
: வளை பயில் கீழ்
கடல் நின்று இட - சங்கு நெருங்கின கீழ்த்திசைக்கடலிலே நின்று இட; நேர்கழி மேல் கடல்
|