பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
134

1

இயற்கைப் புணர்ச்சி

1.7. புணர்ச்சி துணிதல் 

   
புணர்ச்சி துணிதல் என்பது தெய்வத்தை மகிழாநின்றவன் இது நமக்குத் தெய்வப் புணர்ச்சி எனத் தன்னெஞ்சிற்குச் சொல்லி அவளோடு புணரத் துணியாநிற்றல். அதற்குச் செய்யுள்-

7.  ஏழுடையான்பொழி லெட்டுடை
       யான்புய மென்னைமுன்னாள்
  ஊழுடை யான்புலி யூரன்ன
       பொன்னிவ் வுயர்பொழில்வாய்ச்
  சூழுடை யாயத்தை நீக்கும்
       விதிதுணை யாமனனே
  யாழுடை யார்மணங் காணணங்
       காய்வந் தகப்பட்டதே.

7

_______________________________________________________________

வான்நுகத்தின் துளைவழி கோத்தென - அவ்வொத்தகழி மேற்றிசைக் கடலில் இட்ட பெரிய நுகத்தினது துளைக்கட்சென்று கோத்தாற் போல; தில்லைத் தொல்லோன் கயிலை கிளை வயின் நீக்கி - தில்லை யிடத்துப் பழையோனது கயிலைக்கண் ஆயத்தாரிடத்து நின்று நீக்கி ; இகெண்டை கண்ணியைக் கொண்டு தந்த விளைவை அல்லால் - இக்கெண்டை போலும் கண்ணையுடையாளைக் கைக் கொண்டு தந்த நல்வினையின் விளைவாகிய தெய்வத்தை அல்லது; மிக்கன தெய்வம் வியவேன் நயவேன் - மிக்கனவாகிய பிற தெய்வத்தை வியப்பதுஞ் செய்யேன்; நயப்பதுஞ் செய்யேன் எ-று.

   
கயிலைக்கட் கொண்டுதந்த வெனவியையும், இவளைத்தந்த தெய்வத்தையல்லது நயவேனென்று அவளது நலத்தை மிகுத்த மையின், இதுவும் நலம் பாராட்டல். பயந்தோர்ப்பழிச்சற் (தலைவியின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்துதல்) பாற்படுத்தினுமமையும். மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த மருட்கை. பயன்: மகிழ்தல்.

1.7.  கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத்
    தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது.

   
இதன் பொருள் : பொழில் ஏழு உடையான்-பொழில் ஏழு உடையான்; புயம் எட்டு உடையான்-புயம் எட்டுடையான்; முன் என்னை ஆள் ஊழ் உடையான்-எனக்கு ஆட்படுந்தன்மை உண்டா