பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
135

வதற

இயற்கைப் புணர்ச்சி

வதற்கு முன்னே என்னை ஆள்வதொரு புதிதாகிய முறைமையை யுடையான்; புலியூர் அன்ன பொன்-அவனது புலியூரையொக்கும் பொன்னனையாள்; இ உயர் பொழில் வாய் சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணையாக-இவ்வுயர்ந்த மொழிலிடத்து ஒருபொழுதும் விடாது சூழ்தலை உடைய ஆயத்தை நீக்குதற்குக் காரணமாகிய விதி துணையாக; மனனே-மனமே; யாழ் உடையார் மணங்காண் அணங்கு ஆய் வந்து அகப்பட்டது-கந்தருவர் மணங்காண் முன் வருத்துவதாய் வந்து அகப்பட்டது; இனிக் கூட்டத்துக்கு உடன்படுவாயாக என்றவாறு.

    பொன்னீக்குமெனவியையும். ஆகவென்பது ஆ வென நின்ற செய்யுண்முடிபு; புறனடையாற் கொள்க. அணங்காய் வந்தென்றான், உள்ளஞ்செல்லவும் இது தகாதென்று விலக்குதலால் முன் வருத்தமாயினமையின். தெய்வத்தன்மை உடைத்தாய் வந்து எனினும் அமையும். அகப்பட்டதென்று இறந்த காலத்தாற் கூறினான். புணர்ச்சி துணிந்தமையான். இதுவும் உட்கோட்பாற்படும்.

   
இவை இரண்டும் ஒருதலைக்காம மல்லவெனினும் புணர்ச்சி நிகழாமையிற் கைக்கிளைப் பாற்படும். புணர்ச்சி நிகழாமை, தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது என்பதனானறிக. பேதையைப் புணர்ச்சி துணிந்தது, விதிதுணையாகக் கந்தருவர் மனம் ஒரு பெண் வடிவு கொண்டு எனக்கு எய்திற்று என்றமையின். இவனோடு இவளிடையுண்டாய அன்பிற்குக் காரணம் விதியல்லாமை ஈண்டுப் பெற்றாம். பாங்கற்கூட்டம் தோழியிற் கூட்டம் என்ற இவற்றில் அவர் துணையாயவாறுபோல விதியும்  இவரை ஆயத்தினீக்கிக் கூட்டின மாத்திரையே அன்றி அன்பிற்குக் காரணமன்றென்பது. அல்லதூஉம், விதியாவது செயப்படும் வினையினது நியதியன்றே, அதனானே அன்பு தோன்றிப் புணர்ந்தாரெனின், அதுவுஞ் செயற்கைப் புணர்ச்சியாய் முடியும். அது மறுத்தற் பொருட்டன்றே தொல்லோரி தனை இயற்கைப் புணர்ச்சியென்று குறியிட்டது. அல்லதூஉம், நல்வினை துய்த்தக்கால் முடிவெய்தும், இவர்களன்பு துய்த்தாலு முடிவெய்தாது எஞ்ஞான்றும் ஒருபெற்றியே நிற்கும் என்பது. அல்லதூஉம், “பிறப்பா னடுப்பினும் பின்னுந் துன்னத்தரும்  பெற்றியர்” (திருக்கோவை, 205,) என்றலானும், இவர்கள் அன்பிற்குக் காரணம் விதியன்றென்பது. பலபிறப்பினும் ஒத்த அன்பென்றாராகலின், பலபிறப்பினு மொத்து நிற்பதோர் வினையில்லை என்பது. அஃதேல், மேலைச் செய்யுளில் வினைவிளைவே கூட்டிற்றாக விசேடித்துச் சொல்ல வேண்டிய தென்னையெனின், இம்மையிற் பாங்கனையுந் தோழியையுங் குறையுற அவர்கள்