பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
136

1

இயற்கைப் புணர்ச்சி

1.8 கலவியுரைத்தல்

   
கலவியுரைத்தல் என்பது தெய்வப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன் புணர்ச்சி இன்பத்தின் இயல்பு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

8. சொற்பாலமுதிவள் யான்சுவை
      யென்னத் துணிந்திங்ஙனே
  நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று
      நானிவ ளாம்பகுதிப்
  பொற்பா ரறிவார் புலியூர்ப்
      புனிதன் பொதியில்வெற்பிற்
  கற்பா வியவரை வாய்க்கடி
      தோட்ட களவகத்தே.

8

_______________________________________________________________

தங்களினாகிய கூட்டம் கூட்டினார்கள். உம்மை நல்வினையைக் குறையுற்று வைத்து இம்மை அதனை மறந்தான்; மறப்புழியும், அது தான்மறவாது இவர்களையுங் கண்ணுறுவித்து இவர்க்குத் துப்பு மாயிற்றாகலான், விசேடிக்கப்பட்டது. அல்லதூஉம், “பாங்கனை யானன்ன பண்பனை” (தி.8 கோவை பா. 19) என்று அவனை விசேடித்தும், “முத்தகஞ்சேர் மென்னகைப் பெருந்தோளி” (தி.8 கோவை பா.106) என்று அவளை விசேடித்தும், அவர்களினாலாய கூட்டத்திற்குக் கூறினமையின், நல்வினைப் பயனும் அம்மாத்திரையே விசேடித்தது என்பது.

1.8.  கொலைவேலவன் கொடியிடையொடு
     கலவியின்பம் கட்டுரைத்தது.

   
இதன் பொருள்: சொல்பால் அமுது இவள் யான் சுவை துணிந்து என்ன இங்ஙன் நல்பால் வினை தெய்வம் தந்து என்றது. சொல்லும் பகுதியில் அமுதிவள் யானதன் சுவையென்று துணிந்து சொல்ல இவ்வண்ணமே நல்ல கூற்றின் வினையாகிய தெய்வந்தர என்றவாறு. என்பது சுவையை உடைய பொருட்கும். சுவைக்கும் வேறுபாடு இல்லாதவாறு போல எனக்கும் இவட்கும் வேறுபாடில்லை என்றவாறு. இன்று நான் இவள். ஆம் பகுதி பொற்பு ஆர் அறிவார் என்றது. இவ்வாறு வேறுபாடில்லையாயினும், புணர்ச்சியான் வரும் இன்பம் துய்த்தற்பொருட்டாக இன்று யானென்றும் இவளென்றும்