பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
137

1

இயற்கைப் புணர்ச்சி

1.9. இருவயினொத்தல்

இருவயினொத்தல் என்பது புணராத முன்னின்ற வேட்கை யன்பு புணர்ந்த பின்னும் அப்பெற்றியே நின்று வளர்ந்து சேறலால் தலைமகளை மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

9. உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச்
      சிற்றம் பலத்தொருத்தன்
  குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்
      வாயிக் கொடியிடைதோள்

_______________________________________________________________

வேறுபாட்டோடு கூடிய அழகை யாரறிவார் இதனை அனுபவிக்கின்ற யானே அறியினல்லது! என்றவாறு புலியூர் புனிதல் பொதியில் வெற்பில் கல்பாவிய வரைவாய் கடிதோட்டகளவகத்து என்றது. புலியூர்க் கணுளனாகிய தூயோனது பொதியிலாகிய வெற்பிற் கற்பரந்த தாள்வரையிடத்துக் காவலை வாங்கிய களவிடத்து என்றவாறு.

    களவகத்துப் பொற்பெனக்கூட்டுக. தந்தென்பது தரவெனத் திரிக்கப்பட்டது. தந்தின்றென்பது தந்தது என்னும் பொருள்படாமை அறிந்து கொள்க. தந்தன்றென்பதூஉம் பாடம்போலும், கடிதோட்ட என்பதற்குக் கடியப்பட்ட தொகுதியை உடைய களவென்று உரைப்பினும் அமையும். தோட்டவென்றது தலைமகளாயத்தையுந் தன்னிளைஞரையும். கடிதொட்ட வென்பது பாடமாயின், மணந்தொடங்கிய களவென்றுரைக்க, கொடியிடையொடுகலவி-கொடியிடையோடு நிகழ்ந்த கலவி. மெய்ப்பாடு, உவகை, பயன்: மகிழ்ச்சி; தலைமகளை மகிழ்வித்தலுமாம். நல்வினைத் தெய்வம் இவளைக் களவின்கட்கூட்ட அமுதமும் அதன்கட் கரந்து நின்ற சுவையுமென்ன என்னெஞ்சம் இவள்கண்ணே ஒடுங்க யானென்பதோர் தன்மை காணாதொழிய இருவர் உள்ளங்களும் ஒருவேமாமாறுகரப்ப ஒருவேமாகிய ஏகாந்தத்தின்கட் பிறந்த புணர்ச்சிப்பேரின்ப வெள்ளம் யாவரா னறிப்படுமென்று மகிழ்ந் துரைத்தான்; உரைப்பக்கேட்ட தலைமகளும் எம்பெருமான் என்கண் வைத்த அருளினானன்றோ இவ்வகை யருளியதென்று இறப்பவு மகிழ்வாளாம்.

1.9.  ஆரா வின்பத் தன்பு மீதூர
    வாரார் முலையை மகிழ்ந்து ரைத்தது.
 


   
இதன் பொருள்: உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன் -