புணர
இயற்கைப்
புணர்ச்சி
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும்
போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ
லாளல்குல்
போல வளர்கின்றதே.
9
______________________________________________________________
ஒருகால் தன்னை உணர்ந்தவர்கட்குப்
பின்னுணர்தற்குக் கருவியாகிய சித்தவிருத்தியும் ஒடுங்குதலான் மீட்டு உணர்வரியோன்; தில்லைச்
சிற்றம்பலத்து ஒருத்தன்-தில்லையிற் சிற்றம்பலத்தின்கணுளனாகிய ஒப்பில்லாதான்; குணம்
வெளிப்பட்ட கொவ்வை செவ்வாய் இ கொடி இடை தோள் புணர்ந்தால் - அவனது குணமாகிய ஆனந்தம்
வெளிப்பட்டாற்போலுங் கொவ்வைக் கனிபோலும் செவ்வாயை உடைய இக்கொடியிடை தோளைக் கூடினாலும்;
புணரும் தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய்-கூடுந்தோறும் பெரிதாகிய இன்பம் முன்புபோலப்
பின்னும் புதிதாய்; மணம் தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றது-மணந்தங்கிய சுருண்ட குழலையுடையாளது
அல்குல் போல வளராநின்றது எ-று.
உணர்ந்தார்க்குக் குணந்தான்
வெளிப்பட்டவென இயைத் துரைப்பினுமமையும். உணர்ந்தார்க்குணர்வரியோ னென்பதற்குத் தவத்தானும்
தியானத்தானும் எல்லாப் பொருள்களையும் உணர்ந்தார்க்கும் என உம்மை வருவித்து உரைக்கப்பட்டது.
குணந்தான் வெளிப்பட்ட கொடியிடை என்புழி உவமையோடு பொருட் கொற்றுமை கருதி உவமைவினை உவமிக்கப்படும்.
பொருண்மேலேற்றப்பட்டது. புணர்ந்தாற் புதிதாயெனவியையும், புணர்ந்தாலுமென இதற்கும் உம்மை
வருவித்து உரைக்கப்பட்டது. இன்பத்தன்பு - இன்பத்தான் வந்த செயற்கை அன்பு. மெய்ப்பாடும்
பயனும்; அவை, புணர்ச்சிக்கட்டோன்றி ஒருகாலைக்கு ஒருகாற் பெருகாநின்ற பேரின்பவெள்ளத்தைத்
தாங்கலாற்றாத தலைமகன் ஆற்றுதல் பயனெனினும் அமையும்.
வளர்கின்றது என்றமையிற் புணர்ந்ததனாற்
பயனென்னை யெனின், புணராத முன்னின்ற வேட்கை புணர்ச்சிக்கட்குறைபடும், அக்குறைபாட்டைக் கூட்டத்தின்கட்
டம்மிற்பெற்ற குணங்களினானாகிய அன்பு நிறைக்கும், நிறைக்க எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாய் நிற்குமென்பது.
அல்குல்போல வளர்கின்ற தென்றவழி ஒருகாலைக்கு ஒருகால் வளருமென்றார் அல்லர். என்னை, குறைபாடு
உள்ளதற்கு அன்றே வளர்ச்சியுண்டாவது; அல்லதூஉம் எஞ்ஞான்றும் வளருமெனின், அல்குற்கு வரம்பு இன்மையும்
தோன்றும். மற்றென்னை கருதியதெனின், இயற்கைப்புணர்ச்சி புணர்கின்ற
|