1
இயற்கைப்
புணர்ச்சி
1.10. கிளவிவேட்டல்
கிளவி வேட்டல் என்பது இருவயினொத்து
இன்புறாநின்ற தலைமகன் உறுதன்முதலாகிய நான்கு புணர்ச்சியும் பெற்றுச் செவிப் புணர்ச்சி பெறாமையின்
ஒருசொல்வேட்டு வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-
10. அளவியை யார்க்கு மறிவரி
யோன்றில்லை யம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாட்டடங்
கண்ணுதல் மாமதியின்
பிளவியல் மின்னிடை பேரமை
தோளிது பெற்றியென்றாற்
கிளவியை யென்னோ
வினிக்கிள்ளை
யார்வாயிற் கேட்கின்றதே.
10
________________________________________________
காலத்து இவள் பதினோர் ஆண்டும்
பத்துத் திங்களும் புக்காள் ஆகலின் இவளது அல்குல் இலக்கணக் குறைபாடு இன்றியே வளராநின்றது.
வளர்ந்து பன்னீராண்டு நிரம்பினால் ஒரு பெற்றியே நிற்கும். அதுபோல இவன் காதலும் உள்ளம் உள்ளளவு
நிறைந்து பின்னைக் குறைபாடின்றி ஒரு பெற்றியே நிற்குமென்பது.
1.10.
அன்னமன்னவ ளவயவங்கண்டு
மென்மொழிகேட்க
விருப்புற்றது.
இதன் பொருள் :
அளவியை யார்க்கும்
அறிவு அரியோன் தில்லை அம்பலம் போல் வான் கொங்கை வளவிய - அளவை யார்க்கும் அறிவு அரியவனது
தில்லையம்பலம் போலப் பெருங்கொங்கைகள் வளத்தையுடையன; தடங்கண் வாள் - பெரிய கண்கள்
வாளோ டொக்கும்; நுதல் மா மதியின் பிளவு இயல்-நுதல் பெரிய மதியின் பாகத்தி னியல்பையுடைத்து;
இடைமின் - இடை மின்னோடொக்கும்; தோள் பெரு அமை - தோள்கள் பெரிய வேயோடொக்கும்; பெற்றி
இது என்றால்-இவற்றது தன்மை, இதுவானால்; கிள்ளையார் வாயில் கிளவியை இனி கேட்கின்றது என்-கிள்ளைபோல்வாள்
வாயின் மொழியை இனிக் கேட்க வேண்டுகின்றது ஏன்? இப்பெற்றிக்குத் தக்கதே இருக்கும் என்றவாறு.
துறவு துறவியென நின்றாற்போல அளவு
அளவியென நின்றது. மொழி கிளிமொழியோ டொக்குமென்பது போதரக் கிள்ளையாரென்
|