1
இயற்கைப்
புணர்ச்சி
1.11. நலம்புனைத்துரைத்தல்
நலம்புனைந்து உரைத்தல் என்பது
கிளவிவேட்டு வருந்தக் கண்ட தலைமகள் மூரன் முறுவல் செய்ய, தலைமகன் அதுபெற்றுச் சொல்லாடாமையான்
உண்டாகிய வருத்த நீங்கி, நுமதகன்ற மருத நிலத்துக் குறிஞ்சிநிலத்துஇவள் வாய்போல் நாறும் ஆம்பற்
பூக்களுளவோவென அந்நிலத்து வண்டோடு வினவா நிற்றல். அதற்குச் செய்யுள்-
11. கூம்பலங் கைத்தலத் தன்பரென்
பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
காள்நும் அகன்பணையே.
11
_______________________________________________________________
றான். வயினென்பது பாடமாயின்,
வாயினென்பது குறுகி நின்றதாக உரைக்க. வயின் இடமெனினும் அமையும். அவயங்கண்டென்புழி உறுதன் முதலாகிய
நான்கையும் கண்டு என்றார். மெய்ப்பாடு: உவகை,
பயன்: நயப்புணர்த்துதல்.
1.11. பொங்கி ழையைப்
புனைந லம்புகழ்ந்
தங்கதிர் வேலோன் அயர்வு
நீங்கியது.
இதன் பொருள்: அளிகாள்
நும் அகன் பணை-வண்டுகாள் நுமதகன்ற மருதநிலத்து; தேம்பு சிற்றிடை ஈங்கிவள்-தேம்புஞ் சிறிய
விடையை உடைய இவளது; தீம் கனிவாய் கமழும் ஆம்பல்போது உளவோ-இனியதாகிய கனிந்த வாய்போல
நாறும் ஆம்பற் பூக்களுளவோ?; சொல்லுமின் என்றவாறு.
கூம்புகைத்தலத்து அன்பர் என்பு ஊடு
உருக குனிக்கும்-கூம்புங் கைத்தலங்களை உடைய அன்பரது என்பும் உள்ளுருகக் கூத்தாடா நின்ற; பாம்பு
அலங்காரப் பரன் தில்லை அம்பலம் பாடலரின் தேம்பு-பாம்பாகிய அணியை யுடைய பரமனது தில்லையம்பலத்தைப்
பாடாதாரைப் போலத் தேம்புமெனக் கூட்டுக.
அல்லும் அம்மும்: அல்வழிச்சாரியை.
பாம்பலங்காரம்: மெலிந்து நின்றது. ஈங்கிவளென்பது ஒருசொல். கனிவாய்-
|