1
இயற்கைப்
புணர்ச்சி
1.12. பிரிவுணர்த்தல்
பிரிவுணர்த்தல் என்பது ஐவகைப்புணர்ச்சியும்
(கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறிதல் என்பன) பெற்றுப் புணர்வதன் முன்னும் புணர்ந்தபின்னும்
ஒத்தவன்பினனாய் நின்ற தலைமகன் பிரியுமாறு என்னையெனின், இப்புணர்ச்சி நெடுங்காலம் செல்லக்கடவதாக
இருவரையுங் கூட்டிய தெய்வந்தானே பிரியாமற் பிரிவிக்கும், அது பிரிவிக்குமாறு, தலைமகன் தனது
ஆதரவினான் நலம் பாராட்டக் கேட்டு, எம்பெருமான் முன்னின்று வாய்திறந்து பெரியதோர் நாணின்மை
செய்தேனெனத் தலைமகள் நாணிவருந்தாநிற்ப, அதுகண்டு இவள் வருந்துகின்றது யான்பிரிவேனாக நினைந்தாக
வேண்டுமென்று உட்கொண்டு, அவளுக்குத் தான் பிரிவின்மை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
12. சிந்தா மணிதெண் கடலமிர்
தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே
மடமான் விழிமயிலே
_______________________________________________________________
கனிபோலும் வாயெனினும்
அமையும், புனைநலம் என்றது புனையப் பட்ட இயற்கை நலத்தை. அயர்வு நீங்கியது - சொல்லாடாமையின்
உண்டாகிய வருத்த நீங்கியது. மெய்ப்பாடு: உவகை,
பயன்: நயப்புணர்த்துத்தல். இயற்கை அன்பினானும் அவள் குணங்களால் தோன்றிய செயற்கை அன்பினானும்
கடாவப்பட்டு நின்ற தலைமகன் தனது அன்பு மிகுதியை உணர்த்துதல் நயப்புணர்த்துதல் என்பது.
1.12. பணிவள ரல்குலைப் பயிர்ப்பு
றுத்திப்
பிணிமலர்த் தாரோன்
பிரிவுணர்த் தியது.
இதன்
பொருள்: சிந்தாமணி
தெள்கடல் அமிர்தம் தில்லையான் அருளால் வந்தால்-ஒருவன் தவஞ்செய்து பெறும் சிந்தாமணியும் தெளிந்த
கடலின் அமிர்தமும் வருத்தம் இன்றித் தில்லையான் அருளாற்றாமேவந்தால்; இகழப்படுமே-அவை அவனாலிகழப்
படுமா?; மட மான் விழி மயிலே-மடமான் விழிபோலும் விழியை உடைய மயிலே! ; அம் தாமரை அன்னமே-அழகிய
தாமரைக்கண் வாழும் அன்னமே; நின்னை யான் அகன்று ஆற்றுவனோ-நின்னை யான் பிரிந்து ஆற்றி
உளனாவனோ?; சிந்தாகுலம் உற்று என்னை வாட்டந் திருத்துவது என்னோ-சிந்தையின் மயக்கமுற்று என்னை
|