அந
இயற்கைப்
புணர்ச்சி
அந்தா மரையன்ன மேநின்னை
யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை
வாட்டந் திருத்துவதே.
12
1.13. பருவரலறிதல்
பருவரலறிதல் என்பது பிரிவின்மை
கூறக்கேட்ட தலை மகள் பிரிவென்பதும் ஒன்று உண்டு போலும் என உட்கொண்டு முன்னாணினாற் சென்று
எய்திய வருத்த நீங்கிப் பெரியதோர் வருத்தமெய்த அதுகண்டு, இவள் மேலும் மேலும் வருந்துகின்றது
பிரிந்தாற் கூடுதல் அரிதென்று நினைந்தோ நெடும்பொழுது இவ்வாறிருந்தால் அவ்விடத்துக் குடிப்பழியாமென்று
நினைந்தோ அறிகிலேனென அவள் வருத்தம் அறியா நிற்றல். அதற்குச் செய்யுள்-
13. கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை
பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற
கொற்றவன்
சிற்றம் பலமனையாள்
______________________________________________________________
வாட்டுவதென்னோ? என்றவாறு.
அந்தாமரை அன்னம் திரு என்பாருமுளர்.
நின்னை என்புழி உயிரினுஞ் சிறந்த நின்னையென் றும், யான் என்புழி இருதலைப் புள்ளினோருயிரேனாகிய
யானென் றும், அச் சொற்களான் விளங்கின. வாட்டந்திருத்துவதே என்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய்,
வாட்டுவதே என்று பொருள் பட்டு, இரண்டாவதற்கு முடிபாயின. வாட்டத்திருத்துவது என்று பாட மாயின்,
வாட்டத்தின் கணிருத்துவது, என்றுரைக்க, பயிர்ப்பு-பயிலாத பொருட்கண் வந்த அருவருப்பு, ஈண்டுப்
பயிலாத பொருள் பிரிவு. பிரிவுணர்த்தல்-அகன்றாற்றுவனோ எனப் பிரிவென்பதும் ஒன்றுண்டு என்பதுபட
மொழிதல். மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவச்சம் உணர்த்துதல்.
1.13. பிரிவுணர்த்த பெண்கொடிதன்
பருவரலின் பரிசுநினைந்தது.
இதன் பொருள்: கோங்கின்
பொலி அரும்பு ஏய் கொங்கை பங்கன் - கோங்கின்கணுண்டாகிய பொலிந்த வரும்பையொக்கு
|