பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
143

இயற்கைப் புணர்ச்சி

    நீங்கிற் புணர்வரி தென்றோ
        நெடிதிங்ங னேயிருந்தால்
    ஆங்கிற் பழியா மெனவோ
        அறியே னயர்கின்றதே.

1.14 அருட்குணமுரைத்தல்

   
அருட்குணமுரைத்தல் என்பது இற்பழியாமென்று நினைந்தோவென்று கூறக்கேட்ட தலைமகள் இது நந்தோழி அறியின் என்னாங்கொல்லோ என்று பிரிவுட்கொண்டு பிரிவாற்றாது வருந்தா நிற்ப, அக்குறிப்பு அறிந்து அவள் பிரிவு உடம்படுவது காரணமாகத் தலைமகன் யாம் பிரிந்தேமாயினும் பிரிவில்லை எனத் தெய்வத்தின் அருள் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

14. தேவரிற் பெற்றநஞ் செல்வக்
      கடிவடி வார்திருவே
   யாவரிற் பெற்றினி யார்சிதைப்
      பாரிமை யாதமுக்கண்

______________________________________________________________

முலையை உடையாளது பங்கையுடையான்; குறுகலர் ஊர் தீங்கில் புகசெற்ற கொற்றவன் - குறுகாதார் புரங்கள் பாசண்ட தருமமாகிய (வேதாசாரவிரோதம்) தீங்கிலே புகுதலான் அவற்றைக் கெடுத்த வெற்றியை உடையான்; சிற்றம்பலம் அனையாள் அயர்கின்றது நீங்கின்புணர்வு அரிது என்றோ - அவனது திருச்சிற்றம்பலத்தை ஒப்பாள் வருந்துகின்றது பிரிந்தாற் கூடுதல் அரிதென்று நினைந்தோ; நெடிது இங்ஙன் இருந்தால் ஆங்கு இற்பழி ஆம் எனவோ-நெடும் பொழுது இவ்வாறு இருந்தால் அவ்விடத்துக் குடிப்பழியாம் என்று நினைந்தோ; அறியேன்-அறிகிலேன் என்றவாறு.

    தீங்கிற்புக என்பதற்குத் துன்பம் அறியாதார் துன்பத்திற்புக எனினும் அமையும். ஆங்கென்றது சுற்றத்தாரிடத்தும் அயலாரிடத்தும்; ஆங்கு - அசை நிலை எனினும் அமையும், பிரியல் உறுகின்றான் ஆகலின், இற்பழி யாம் என்று வேறுபட்டாளாயின் நன்று என்பது கருத்து. மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த மருட்கை. பயன்: ஐயந்தீர்தல், அவ்வகை தலைமகளது ஆற்றாமைத்தன்மை தலைமகற்குப் புலனாயிற்று; புலனாகத் தலை மகன் இவ்வகை தன்னெஞ்சோடுசாவி ஆற்றானயினானென்பது.

1.14.  கூட்டிய தெய்வத் தின்ன ருட்குணம்
     வாட்ட மின்மை வள்ள லுரைத்தது.


   
இதன் பொருள்தேவரில் பெற்ற நம் செல்வக்கடி - முயற்சியும்