பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
171

பாங்கற் கூட்டம்

    பாம்பிணை யாக்குழை கொண்டோன்
        கயிலைப் பயில்புனமுந்
 
    தேம்பிணை வார்குழ லாளெனத்
        தோன்றுமென் சிந்தனைக்கே.

38

2.21 உயிரென வியத்தல்

   
உயிரென வியத்தல் என்பது பொழில்கண்டு மகிழ்ந்து அப்பொழிலிடைச் சென்று புக்கு, அவளைக்கண்டதுணையான் என்னுயிர் இவ்வாறு செய்தோநிற்பதென வியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

39. நேயத்த தாய்நென்ன லென்னைப்
        புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
   ஆயத்த தாயமிழ் தாயணங்
        காயர னம்பலம்போல்

___________________________________________________________

களிமா மயிலால் - களிப்பையுடைய கரிய மயிலானும்-கதிர் மா மணியால்-ஒளியையுடைய பெரிய நீலமணியானும், வாம் பிணையால்-வாவும் பிணையானும்; வல்லி ஒல்குதலால்-வல்லி நுடங்குதலானும்; கயிலைப் பயில் புனமும் என் சிந்தனைக்குத் தேம்பிணை வார்குழலாள் எனத் தோன்றும்- கயிலைக்கணுண்டாகிய அவள் பயிலும் புனமும் இன்புறுத்துதலால் என்மனத்திற்குத் தேம்பிணையை யுடைய நெடிய குழலை யுடையாளென்றே தோன்றா நின்றது எ-று.

    மன்னும் அம்பலவன் பாம்பு இணையாக் குழை கொண்டோன் கயிலை-நிலைபெறு மம்பலத்தையுடையவன் பாம்பை ஒன்று மொவ்வாத குழையாகக்கொண்டவன் அவனது கயிலை யெனக்கூட்டுக.

   
பாம்பையிணைத்துக் குழையாகக்கொண்டவ னெனினுமமையும். தேம்பிணை-தேனையுடையதொடை தேம்பிணை வார்குழலா ளெனத் தோன்றுமென்பதற்கு அவளைப் போலப் புனமும் யானின் புறத் தோன்றாநின்ற தென்பாருமுளர். மெய்ப்பாடு : உவகை. பயன் : மகிழ்தல். நெருநலைநாளில் தலைமகளைக் கூடின பொழிலிடம் புகுந்து இவ்வகை சொன்னானென்பது.

38

2.21.  வெறியுறு பொழிலின் வியன்பொ தும்பரின்
    
  நெறியுறு குழலி நிலைமை கண்டது.

   
இதன் பொருள் : நென்னல்நேயத்தது ஆய் என்னைப் புணர்ந்து-நெருநல் உள்ள நெகிழ்ச்சியையுடைத்தாய் என்னைக்கூடி; நெஞ்சம்