பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
170

பாங்கற் கூட்டம்

    றாவியன் னார்மன்னி யாடிடஞ்
        சேர்வர்கொலம்பலத்தெம்
    ஆவியன் னான்பயி லுங்கயி
        லாயத் தருவரையே.

37

2.20 பொழில்கண்டு மகிழ்தல்

   
பொழில்கண்டு மகிழ்தல் என்பது தலைமகளை நோக்கிச் செல்லாநின்ற தலைமகன் முன்னைஞான்று அவளைக்கண்ணுற்ற பொழிலைச் சென்றணைந்து, அப்பொழிலிடை அவளுறுப்புக்களைக் கண்டு, இப்பொழில் என்சிந்தனைக்கு அவள்தானேயெனத் தோன்றாநின்றதென்று இன்புறாநிற்றல். அதற்குச் செய்யுள்

38. காம்பிணை யாற்களி மாமயி
      லாற்கதிர் மாமணியால்
   வாம்பிணை யால்வல்லி யொல்குத
      லால்மன்னு மம்பலவன்

____________________________________________________________

அழிவுற்று - மிக்க விருப்பத்தையுடையராய்க் கெழுமுதல் காரணமாக நெஞ்சழிதலான், இடமறியாது; அம்பலத்து எம் ஆவி அன்னான் பயிலும் கயிலாயத்து அருவரை-அம்பலத்தின்கணுளனாகிய எம்மாவியையொப்பான் அடுத்து வாழுங் கயிலாயத்தின்கட் பிறரானெய்துதற்கரிய தாழ்வரையிடத்து; ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர் கொல்-ஆவியை யொக்கும் ஆயத்தார் நிலை பெற்று விளையாடும் அவ்விடத்து அவர்காண வந்து பொருந்துவரோ!      எ - று.

    அளித்தல் :  பிரிகின்ற காலத்துச்செய்த தலையளியெனினு மமையும். மிக்கவென்பது: கடைக்குறைந்து நின்றது. ஆயத்திடை வருவர்கொல்லென ஐயத்துள் ஒருதலையே, கூறினாள், பெருநாணினளாகலின், மெய்ப்பாடு: அச்சத்தைச்சார்ந்த மருட்கை. பயன்: உசாவி ஆற்றாமை நீங்குதல். ஆயவெள்ளத்துள்ளே வருவர்கொல்லோவென்னும் பெருநாணினானும், ஆற்றாமையான் இறந்து பட்டனர்கொல்லோவென்னும் பேரச்சத்தினானும் மீதூரப்பட்டுத் தன்றன்மையளன்றி நின்று இவ்வகை உசாவினா ளென்பது.

37

2.20.  மணங்கமழ்பொழிலின் வடிவுகண்
      டணங்கெனநினைந் தயர்வுநீங்கியது.

   
இதன்பொருள்: காம்பு இணையால் - வேயிணையானும்: