பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
169

தய

பாங்கற் கூட்டம்

தயிற்குல வேல்கம லத்திற்
        கிடத்தி அனநடக்கும்
    மயிற்குலங் கண்டதுண் டேலது
        வென்னுடை மன்னுயிரே.

36

2.19 மின்னிடை மெலிதல்

   
மின்னிடை மெலிதல் என்பது நெருநலைநாளில் தலையளி செய்து நின்னிற்பிரியேன், பிரியினும் ஆற்றேனென்று கூறிப்பிரிந்தவர் வேட்கைமிகுதியால் இடமறியாது ஆயத்திடைவருவார் கொல்லோவென்னும் பெருநாணினானும், ஆற்றாமையான் இறந்துபட்டார் கொல்லோ வென்னும் பேரச்சத்தினானும், யாருமில்லொருசிறைத் தனியேநின்று, தலைமகனை நினைந்து தலைமகள் மெலியாநிற்றல். அதற்குச் செய்யுள்-

37. ஆயியன் னாய்கவ லேல்அக
        லேமென் றளித்தொளித்த
   ஆவியன் னார்மிக்க வாவின
        ராய்க்கெழு மற்கழிவுற்

_______________________________________________________________

நல்ல வேலைக் கமலத்தின்கட்கிடத்து; அனம் நடக்கும் மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிர்-அன்னம்போல நடப்பதோர் மயிற்சாதி காணப்பட்டதுண்டாயின், அது எனது நிலை பெறுமுயிர் எ - று. எயிற்குலமூன்றென்றார். அவை இரும்பும், வெள்ளியும், பொன்னுமாகிய சாதி வேறுபாடுடைமையின், குயிற் குலங்கொண்டென்றான், மொழியாற் குயிற்றன்மையையுடைத்தாகலின், தொண்டைக் கனிவா யென்பதற்குத் தொண்டைக்கனி போலும் வாயென்பாருமுளர். மெய்ப்பாடு: உவகை, பயன்: ஆற்றாமை நீங்குதல்.

   
இவை நிற்க இடந்தலை தனக்குமாமாறு சொல்லுமாறு.

36

2.19.  மன்னனை நினைந்து
     மின்னிடை மெலிந்தது.


   
இதன் பொருள் : அளித்து ஆவி அன்னாய் கவலேல் அகலேம் என்று ஒளித்த ஆவி அன்னார்-தலையளிசெய்து ஆவியை யொப்பாய் கவலாதொழி நின்னை நீங்கேமென்று சொல்லி மறைந்த என்னாவியை யொப்பார் ; மிக்க அவாவினர் ஆய்க் கெழுமற்கு