பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
168

இய

பாங்கற் கூட்டம்

இயலுள வேயிணைச் செப்புவெற்
        பாநின தீர்ங்கொடிமேற்
    யலுள வேமலர் சூழ்ந்திருள்
        தூங்கிப் புரள்வனவே.

35

2.18 அவ்விடத்தேகல்

   
அவ்விடத் தேகல் என்பது செவ்விசெப்பக் கேட்ட தலைமகன் இவ்வாறு காணப்பட்டதுண்டாயின் அது வென்னுயிரெனத் தானவ்விடநோக்கிச் செல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்-

36. எயிற்குல மூன்றிருந் தீயெய்த
      வெய்தவன் தில்லையொத்துக்
   குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி
      வாய்க்குளிர் முத்தநிரைத்

_____________________________________________________________

பூவின்மேற் கிடப்பன சிலகயல்களுளவே; கனி பவளத்து அயல் ஒத்த நிரை முத்தம் உளவே-கனிந்த பவளத்திற்கயல் இனமொத்த நிரையாகிய முத்துக்களுளவே; இணைச்செப்பு அரன் அம்பலத்தின் இயல் உளவே-இணையாகிய செப்பு அரனது அம்பலத்தி னியல்பை யுடையனவுளவே; மலர் சூழ்ந்து இருள் தூங்கிப் புரள்வன புயல் உளவே-மாலைசூழ்ந்து இருள் செறிந்து கிடந்து புரள்வன புயலுளவே? உளவாயின் யான்கண்ட வுருவம் நீ கூறியவுருவமாம் எ-று. அரனம்பலத்தினியல்: ஆறாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. சூழ்ந்தென்பதூஉம், தூங்கியென்பதூஉம் சினைவினைப்பாற்பட்டு முதல்வினைகொண்டன. மலர்சினை போலக் குழற்கின்றியமையாமையிற் சினைப்பாற்பட்டது. புயல் திரண்டாற் போலுமென்பது போதரப் புரள்வனவெனப் பன்மையாற் கூறினான். மெய்ப்பாடும் பயனும்:  அவை.

35

2.18. அரிவையதுநிலைமை யறிந்தவனுரைப்ப
    
எரிகதிர்வேலோ னேகியது.

   
இதன் பொருள்  எயில் குலம் மூன்றும் இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து - எயிற்சாதி மூன்றும் பெரிய தீயை யெய்த அவற்றை யெய்தவனது தில்லையை யொத்து; குயில் குலம் கொண்டு - குயிலாகிய சாதியைக்கொண்டு; தொண்டைக் கனிவாய்க் குளிர் முத்தம் நிரைத்து -தொண்டைக் கனியிடத்துக் குளிர்ந்த முத்தங்களை நிரைத்து; அயில் குல வேல் கமலத்தில் கிடத்தி - கூர்மையையுடைய