6
6.
முன்னுறவுணர்தல்
வாட்டம் வினாதன் முன்னுற வுணர்தல்
கூட்டி யுணருங் குறிப்புரை யாகும்.
-திருக்கோவைநெறிவிளக்கம்
______________________________________________________________
முன்னுறவுணர்தல் - இதன்
பொருள் : வாட்டம்
வினாதல் எனவிஃதொன்றும் முன் னுறவுணர்தலாம் எ-று.
அது தலைமகன் இங்ஙனம் வினாயதற்
கெல்லாம் தோழி மறுமொழி கொடாளாகத் தலைமகன் வாடினான், வாடவே தலைமகளும் அதுகண்டு
வாடினாள், ஆதலால் இருவரது வாட்டமும் வினாவப்படுதல். அன்றியும் முன்னர்த் தலைமகனது வாட்டத்தைப்
பாங்கன் வினாயதுபோலத் தலைவியது வாட்டத்தையும் பாங்கி வினாதலாம்.
முன்னுற்றதனை யுணர்தலானே இதற்கு
முன்னுறவுணர்தல் என்று பெயராயிற்று. அஃதாவது தலைமகனைப் பாங்கன் வினாய வாறுபோலத் தலைமகளையும்
யாதனானோ இவள் வாடியதென ஐயுற்றுணர்தல். இவள் தலைமகளை வினாவுவது இயற்கையிறுதியினின்றி இடந்தலையிறுதியினெனக்
கொள்க. என்னை? தோழியும், பாங்கனைப்போலப் பிற்றைஞான்றே தலைமகளை வினாவப் பெறாளோவெனின்,
வினாவாள். எற்றிற்கு? தலைமகளை ஒருபொழுதும் விடாத தோழி இவளை இத்தினங்காறுங் காணாளோவெனின்,
காணும். காணின், இயற்கைப்புணர்ச்சியது நீக்கத்து இவளது வாட்டம் தோழி காணாதொழிவானேனெனின்,
இவரைக்கூட்டி முடித்த விதி தோழிக்குத் தலைமகளது வாட்டம் புலனாகாமை மறைக்கும். என்னை? பாங்கற்கூட்டமும்
இடந்தலைப்பாடும் நடக்க வேண்டி, அல்லதூஉம், தலைமகனுக்குந் தலைமகளுக்கும் வாட்டம் ஒக்க நிகழினும்
இயற்கைப்புணர்ச்சியது இறுதிக்கட் டலைமகனைப் பாங்கன் கூடியும் தலைமகளைப் பாங்கிகூடியும் செய்தாராயினும்,
தலைமகனது வாட்டத்தைப் பாங்கன் வினாவுதல் தலைமையாதலான் முன் வினாவப்படும். பாங்கன்
வினாவிய பின்னர்ப் பாங்கி வினாவப்படும். ஆதலால் இடந்தலைப்பாட்டினிறுதியே தோழிக்கு வாட்டம்
வினாதற்கு இடமாயிற்றெனவறிக.
கூட்டியுணருங் குறிப்புரையாகு
மென்றது இந்த வாட்டம் வினாதற்குப் பக்கக் கிளவியாகச் சேறல் துணிதல் முதலாக முன்னுரைக்கப்பட்ட
கிளவியெல்லாங் கூட்டி யுரைத்துக் கொள்ளப்படுமென்றவாறு. என்னை பக்கக்கிளவி யாமாறு? தலைமகன்
தனது வாட்டத்தால் அங்ஙனம் பலவும் வினாயன வெல்லாம் தலைமகள் தனது வாட்டத்தாலுரைத்தாற்
போலாயின. என்னை, அவ்வள
|