New Page 1
இருவருமுள்வழி அவன் வரவுணர்தல்
வேழமுன் னாய்க்கலை
யாய்ப்பிற
வாய்ப்பின்னும் மென்றழையாய்
மாழைமென் னோக்கி யிடையாய்க்
கழிந்தது வந்துவந்தே.
61
_______________________________________________________________
அழிந்து பொடியாய்வீழ நோக்கிய
அம்பலத்தானது வெற்பின் இப்புனத்தின் கண்ணே கூறுவது; முன் வேழமாய் - முன் வேழமாய்; கலையாய்
- பின் கலையாய்; பிறவாய்-பின் வேறுசிலவாய்; பின்னும் மெல் தழையாய் - பின்னும் மெல்லிய
தழையாய்; வந்து வந்து-வந்து வந்து; மாழை மெல் நோக்கி இடையாய்க் கழிந்தது - முடிவிற் பேதைமையையுடைய
மெல்லிய நோக்கத்தையுடையாளது இடையாய்விட்டது; இவ்வையர் வார்த்தை ஆழம் உடைத்து - அதனான்
இவ்வையர்வார்த்தை இருந்தவாற்றான் ஆழமுடைத்து எ-று.
மன்னும் ஓவும்: அசைநிலை. இப்புனத்தேயென்றது
இவளிருந்தபுனத்தே யென்றவாறு. மெல்லிய நோக்கத்தையுடையாள் இடைபோலப் பொய்யாய்விட்ட தென்பாருமுளர்.
பின்னுமென்றது முன்னை வினாவே ஐயந்தாராநிற்பப் பின்னுமொன்று கூறினானென்பதுபட நின்றது. தன்கண்வந்து
முடிதலின் வந்து வந்தென்றாள். சொற்பதம்-சொல்லளவு. அறிவு நாடியது-அறிவானாடி யது. மெய்ப்பாடு: மருட்கையைச்
சார்ந்த பெருமிதம். பயன்: ஐயந்தீர்தல்.
61
இருவருமுள்வழி அவன்வரவுணர்தல்
முற்றிற்று.
|