பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
203

7


7. குறையுறவுணர்தல்

குறையுறவுணர்தலாவது தலைமகன் குறையுறத் தோழி அதனைத் துணிந்துணராநிற்றல். அதுவருமாறு-

    குறையுற்று நிற்ற லவன்குறிப் பறித
    லவள்குறிப் பறிதலோ டவர்நினை வெண்ணல்
    கூறிய நான்குங் குறையுற வுணர்வெனத்
    தேறிய பொருளிற் றெளிந்திசி னோரே.

-திருக்கோவைநெறிவிளக்கம்


6.1. குறையுற்றுநிற்றல்

   
குறையுற்று நிற்றல் என்பது தலைமகளது வாட்டங்கண்டு ஐயுறாநின்ற தோழியிடைச்சென்று, யான் உங்களுக்கெல்லாத் தொழிலுக்கும் வல்லேன்; நீயிர் வேண்டுவதொன்று சொல்லுமின்! யான் அது செய்யக்குறையில்லை யென இழிந்தசொல்லால் தலைமகன் தன்னினைவு தோன்ற ஐயுறக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

63. மடுக்கோ கடலின் விடுதிமி
        லன்றி மறிதிரைமீன்

   படுக்கோ பணிலம் பலகுளிக்
கோபரன் தில்லைமுன்றிற்

____________________________________________________________

    குறையறவுணர்தல் - இதன் பொருள்: குறையுற்றுநிற்றல், அவன் குறிப்பறிதல், அவள் குறிப்பறிதல், இருவர்நினைவுமொருவழியுணர்தல் எனவிவை நான்கும் குறையுறவுணர்தலாம் எ-று. அவற்றுள்-

7.1.
 
கறையுற்ற வேலவன்
    குறை யுற்றது.

   
இதன் பொருள்: விடு திமில் கடலின் மடுக்கோ - விடப்படுந் திமிலைக் கடலின்கட் செலுத்துவேனோ; அன்றி மறி திரை மீன் படுக்கோ-அன்றிக் கீழ்மேலாந் திரையையுடைய கிளர்ந்த கடலிற்புக்கு மீனைப்படுப்பேனோ; பல பணிலம் குளிக்கோ - ஒரு குளிப்பின்கட் பல பணிலங்களையு மெடுப்பேனோ; பரன் தில்லை முன்றில் வளை கொடுக்கோ - பரனது தில்லைமுற்றத்திற் சென்று