| New Page 1 
குறையுற வுணர்தல் 
    கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்காயகுற் றேவல்செய்கோ
 தொடுக்கோ பணியீ ரணியீர்
 மலர்நும் சுரிகுழற்கே.
 
63 
7.2 
அவன் குறிப்பறிதல்
 அவன் குறிப்பறிதல் என்பது குறையுறாநின்றவன்
முகத்தே தலைமகளது செயல் புலப்படக்கண்டு, இவ்வண்ணல் குறிப்பு இவளிடத்ததெனத் தோழி தலைமகனது
நினைவு துணிந்துணரா நிற்றல். அதற்குச் செய்யுள் -
 
 64. அளியமன் னும்மொன் றுடைத்தண்ண
 லெண்ணரன் தில்லையன்னாள்
 கிளியைமன் னுங்கடி யச்செல்ல
 நிற்பிற் கிளரளகத்
 
____________________________________________________________ 
எல்லாருங்காணச் சங்கவளைகளை
விற்பேனோ; மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ-அன்றி நும்மையன்மார்க்குப் பொருந்தின
குற்றேவல்களைச் செய்வேனோ; அணி ஈர் மலர் நும் சுரிகுழற்குத் தொடுக்கோ-அணியப்படுந் தேனாலீரிய
மலரை நுஞ்சுரிகுழற்குத் தொடுப்பேனோ; பணியீர்-நீயிர்வேண்டியது கொல்லுமின் எ-று.
 மற்று:  வினைமாற்று. இவன்
உயர்ந்த தலைமகனாதலின் அவர் தன்னை வேறுபடவுணராமைக் கூறியவாறு. முன்னிரந்து குறையுறுதற் கிடங்காட்டிக்
குறையுற வுணர்தற்கு இயைபுபடக் குறையுறுமாற்றை ஈண்டுக் கூறினான். இது திணைமயக்கம். என்னை,
“உரிப்பொருளல்லன மயங்கவும் பெறுமே” (தொல்., பொருள். அகத்திணை-13) எ-ம். “புனவர் தட்டை
புடைப்பி னயல, திறங்குகதி ரலமரு கழனியும், பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே”
(புறம்-49)    எ-ம் சொன்னாராகலின். மெய்ப்பாடு: இனிவரல். பயன்:  குறையுறுதல்.
 
63 
7.2.  பொற்றொடித் தோளிதன்
சிற்றிடைப் பாங்கிவெறிப்பூஞ் சிலம்பன்
குறிப்ப றிந்தது.
 
 இதன் பொருள்: அரன்
தில்லை அன்னாள் மன்னும் கிளியை
 |